Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த ஆத்தா வந்தா எனக்கென்ன.. கண்டுக்காமல் போய்ட்டே இருக்கும் மொட்டை சுரேஷ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வழியாக அர்ச்சனாவை கூட்டிக் கொண்டு வந்து விட்டனர் பிக் பாஸ் வீட்டுக்குள். அவரது முக்கிய டார்கெட்டே மொட்டை சுரேஷ் என்று பலரும் நினைக்கிறார்கள். அவரோ ஜஸ்ட் லைக் தட் ஜாலியாக இருக்கிறார் வழக்கம் போல.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதுமே வைட் கார்ட் என்ட்ரி என்று யாரையாவது ஒருவரை களம் இறங்குவார்கள் .அந்த மாதிரி தான் தற்போது ஜீ தமிழில் பிரபலமான அர்ச்சனா இன்று வந்திருக்கிறார் .

இவர் இந்த வீட்டிற்குள் நுழைந்ததும் என்ன மொட்டை சுரேஷுக்கு டப் பிளேயர் வந்தாச்சு என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள். ஆனாலும் யார் வந்தாலும் எனக்கு கவலை இல்லை என்று அசால்டாக நடந்து கொண்டிருக்கிறார் மொட்ட சுரேஷ் .

 சுவாரசிய சுரேஷ்

சுவாரசிய சுரேஷ்

இவருடைய கேரக்டர் மட்டும்தான் இந்த வீட்டிற்குள் சுவாரசியமாக இருக்கிறது இவர் ஒருவர் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சியை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு ப்ரமோவிலிருந்து அனைத்து சண்டை சச்சரவு களிலும் இவர்தான் இருந்து கொண்டிருக்கிறார். சிலநேரங்களில் இவருடன் நிகழ்ச்சியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் இவர் அசால்டாக அனைவரின் மன நலத்தையும் வெளிக்காட்டும் விதமாக வாயைப் பிடுங்கி கொண்டிருக்கிறார்.

 உள்ளுக்குள் கொலை வெறி

உள்ளுக்குள் கொலை வெறி

அங்கு இருப்பவர்கள் இவர் கூட சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் இவர் மீது கொலவெறியில் தான் இருக்கிறார்கள் என்று அடிக்கடி நிரூபித்து வருகிறார்கள் ஆனால் இவர் ரசிகர்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவர் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகும்போது இவரெல்லாம் அந்த வீட்டிற்குள் என்ன செய்யப் போகிறார் இந்த வயதில் வந்திருக்கிறாரே என்று கூறிய ரசிகர்களே இன்று வாய் பிளந்து போய் நிற்கின்றனர்.

 என்டர்டெய்ன்மென்ட்டே இல்லை

என்டர்டெய்ன்மென்ட்டே இல்லை

இவர் மட்டும் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சியில் என்டர்டைன்மென்ட் இல்லை என்று கூறும் அளவிற்கு ஜாலியாகவும் விருவிருப்பாகவும் கொண்டு போய்க் கொண்டிருப்பது இவர் மட்டும்தான் . ஆனால் இவருக்கு போட்டியாளராக பலர் இருந்தாலும் பதினாறாவது ஆக இந்த வீட்டிற்குள் நுழைந்து இருக்கும் அர்ச்சனாவின் வருகையை பார்த்ததும் அனைவரும் ஆவலாக ஓடி போய் கட்டி பிடித்து கொண்டு இருக்கும்போது இவர் அசால்டாக வரும் போதே தெரியும் நீங்க தான் வருகிறீர்கள் என்று நக்கல் அடிக்கின்றார்.

 டரியல் அர்ச்சனா

டரியல் அர்ச்சனா

தொகுப்பாளராக இருந்தாலும் அவர்களின் முதன்மையானவராக இருக்கும் அர்ச்சனா வாயாலே அனைவரையும் பாடாய் படுத்தி எடுப்பவர். அதுபோலதான் இப்போ சுரேஷ் சக்கரவர்த்தியும் இருந்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரையும் பார்த்ததும் ரசிகர்கள் வாய்க்கு வாய் சரியான சண்டை தானே என்று கமென்ட் போட்டு வருகிறார்கள். வந்ததும் முதல் நாளே இவரிடம் வம்பு இழுத்துக் கொண்டு தான் இருக்கிறார். இவர் இரட்டை அர்த்தத்தில் தான் பேசிக் கொண்டிருக்கிறார். இவர் பேசும்அர்த்தத்தை அங்கு இருப்பவர்களும் ரசிகர்களும் நன்றாகவே புரிந்து இருக்கிறார்கள்.

டார்கெட்

டார்கெட்

அதுவும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு நன்றாக தெரிகிறது .ஆனாலும் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் அவர் அசால்டாக அர்ச்சனாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். ப்ரோமோ வில் இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து இனி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நன்றாக களைகட்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த வீட்டிற்குள் நுழைந்ததும் சுரேஷ் சக்கரவர்த்தியை டார்கெட் பண்ணிதான் கேள்விகளையும் கேட்டு வருகிறார். இந்த வீட்டிற்குள் சுரேஷ் சக்கரவர்த்தியின் சமையல் பிடிக்காதவர்கள் யார் என்ற கேள்வியை போட்டிருக்கிறார்.

 மைன்ட் வாய்ஸ் மன்னாரு

மைன்ட் வாய்ஸ் மன்னாரு

அதற்கு ரியோ அவரிடம் பிடித்ததே அந்த சமையல் மட்டும் தான். அதனால் அதற்கு எங்களால் கை தூக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டதும் அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னடா நம்ம மனசுல நெனச்சதே இவரும் பேசி விட்டார் என்று ஜால்ரா அடிப்பது போல இருக்கிறது இவர்களின் சிரிப்பு .ஆனால் அதை பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி மைண்ட் வாய்ஸில் சிரிங்க சிரிங்க சீக்கிரமா அடுத்த டாஸ்க் உங்களை பார்த்து விடுவேன் என்று சொல்கிற மாதிரி இருக்கிறது.

 அர்ச்சனாவின் வருகை

அர்ச்சனாவின் வருகை

சரி ஏதோ புதுசா டிரை பண்ணுவாங்கன்னு பார்த்தா இந்த பிக்பாஸ் எப்பவும் போலத்தான் ஒயிட் காட்டு என்று ஒன்னு வச்சு அதுல அர்ச்சனாவை களமிறக்கி இருக்கிறது. போன சீசனில் வனிதா வந்து அனைவரையும் ஒரு வளிப்படுத்தினார் இப்போ இவர் வந்து இருக்கிறார். இவர் என்ன வழி படுத்தப் போகிறார் என்று பொருத்திருந்து பார்த்தால் தெரியும் . ஆனால் இவர்கள் யார் என்ன செய்தாலும் சுரேஷ் சக்கரவர்த்தி கேட்டார் டப்பாக தான் இந்த வீட்டிற்குள் இருந்து கொண்டிருக்கிறார் .அனைவரும் சேர்ந்து இவரை டார்கெட் பண்ணினாலும் அவர் அசால்டாக அவரை நோக்கி வரும் பந்துகளை தட்டிவிட்டு போய்க் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் அவருக்கு ஆர்மி அமைத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+