என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கனு கூட கேப்பீங்களோ.. டென்ஷன் ஆன பாத்திமா பாபு! என்னாச்சு?
சென்னை : பிரபல செய்தி வாசிப்பாளராகவும், நடிகையாகவும், பிக்பாஸ் போட்டியாளராகவும் அறியப்பட்ட பாத்திமா பாபுவிடம், ஃபேஸ்புக்கில் நெட்டிசன் ஒருவர் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்டதால், கோபமாக பதில் கொடுத்துள்ளார்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் பாத்திமா பாபு. பின்னர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான 'கல்கி' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களிலும், சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் பாத்திமா பாபு.

நடிகை பாத்திமா, பாபு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஆஷிக் மற்றும் ஷாருக் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். நடிகை பாத்திமா பாபு தனது சமூக வலைதள பக்கத்தில் தனது இரண்டு மகன்கள் உடன் இருக்கும் புகைப்படங்களை அண்மையில் பதிவு செய்தார்.
இந்நிலையில், பாத்திமா பாபுவிடம், நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்வியால் கொந்தளித்துள்ளார் பாத்திமா பாபு. பாத்திமா, இந்துவான பாபுவை திருமணம் செய்த நிலையில், ஏன் பிள்ளைகளுக்கு இந்து பெயர் வைக்கவிலலி எனக் கேள்வி எழுப்பினார். முதலில் அதற்கு நிதானமாக பதில் சொன்ன பாத்திமா, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அந்த நபர் தொடர்ந்து பேசியதால் டென்ஷன் ஆனார்.

பாத்திமா பாபுவின் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், "உங்க ஆத்துக்காரர் இந்துதானே.. உங்க குடும்பத்துல ஒரு இந்து பெயர் கூட இல்லையே பாத்திமா மேடம்.. வெரி பேட் அண்ட் சேட்" என கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதில் அளித்த பாத்திமா பபு, "எங்க குழந்தைகளைக் கேக்கறீங்கன்னா அவருக்கு பிரச்சனை இல்லை.. அப்ப உங்களுக்கு ஏன்?" என ரிப்ளை கொடுத்தார்.
தொடர்ந்து அந்த நபர், "நியாயத்தை தானே கேட்டேன்.. இது பொது மேடை.. நான் எவ்விதத்திலும் தவறாக கேட்கவில்லை" என்றார். அதற்கு பாத்திமா பாபு, "நான் ஒரு இந்துவை பள்ளிவாசலில் வைத்து நிக்காஹ் செய்துகொண்டதால் இஸ்லாமிய பெயர்கள் இருக்கிறது. அதனால், பொத்திட்டு போகவும்" என சூடாக பதிலடி கொடுத்தார்.

பொது மேடையில் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், அதனால் கேட்டேன் என அந்த நபர் பதில் கொடுக்க, அதற்கு டென்ஷனான பாத்திமா பாபு, "பொதுமேடையில் என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கனு கூட கேப்பீங்களோ.. பொது மேடையாம்ல பொது மேடை" என கோபமாக பதில் அளித்துள்ளார்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications