பெண் பார்க்கும் படலத்தில் பெண்ணை பார்க்கவே இல்லையாமே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் பெண் பார்க்கும் படலத்தின் நினைவுகள் குறித்த நிகழ்வுகள் குறித்து கரு பழனியப்பன் நிகழ்ச்சி நடத்தினார்.

அதில் ஒருவர் தன் பெண் பார்க்கும் படலத்தில் பெண்ணை பார்க்கவே இல்லை என்று சுவையாக தனது பெண் பார்க்கும் வைபோகம் பற்றி கூறினார்.

பெண் தன்னை தைரியமாக பார்த்த வைபோகத்தையும் தான் ஒரு அனுமானத்தில் தங்கை சொன்னதை வைத்து பை என்று கை அசைத்ததையும் கூறினார்.

போட்டோ காட்டினார்

போட்டோ காட்டினார்

வீட்டுக்கு வந்தபோது அம்மா மூன்று போட்டோ காட்டினாங்க. என்னோட கண்டிஷன் மாப்பிள்ளை 6 அடி இருக்கணும் என்பதுதான். ஆனால், அம்மா காண்பிச்ச மூணு போட்டோ பயோ டேட்டாவும் ஆறு அடி இல்லை என்கிறார். கரு பழனியப்பன் நீங்கள் எத்தனை அடி என்று கேட்டார் நான் 5 அடி 7 அங்குலம் என்கிறார்.

ஒதுக்கிய போட்டோ

ஒதுக்கிய போட்டோ

ஒரு போட்டோவை அம்மா வேண்டாம் என்று ஒதுக்கி வச்சிருந்து பிறகு காண்பித்தார்கள். அது பயோடேட்டா பார்த்தால் ஆறு அடி இருந்தது. எதுக்காக ஒதுக்கி வச்சிருந்தாங்கன்னு பார்த்தா அவர் காதுல கம்மல் கையில காப்பு எல்லாம் போட்டு இருந்தார். அதுனால் ஒதுக்கி இருந்தாங்க.

எனக்கு ஓகே

எனக்கு ஓகே

ஹைட் எனக்கு ஓகேன்னு சொன்ன உடனே, எங்க வீட்டில் ஒத்துக்கிட்டு, அவங்க டாடி மம்மிகிட்ட வர சொன்னாங்க. அவர் வந்து உட்கார்ந்து என்னை பார்க்கவே இல்லை. நான் நல்லா பார்த்தேன் என்று பெண் சொன்னார். ஏன் சார் நீங்க பார்க்கலேன்னு கரு பழனியப்பன் சார் கேட்டதுக்கு , நாங்க நாலு பேர்தான் சார் போயிருந்தோம். எல்லாரும் எங்களையே பார்க்கற மாதிரி இருந்ததுன்னு அந்த பெண்ணின் கணவர் சொன்னார்.

அவர் என்னை பார்க்கலை

அவர் என்னை பார்க்கலை

கடைசியில் பை சொல்லும்போது கூட அவர் என்னை பார்க்காமலே பை சொன்னார் சார்னு சொன்னார். இவங்கதான் பை சொன்னாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டபோது,. என் தங்கை சொன்னாங்க பொண்ணு பை சொல்லுது பாரு நீயும் சொல்லுன்னு.. அதான் ஒரு அனுமானத்தில் கையை அசைச்சேன்னு சொன்னார்.

புளு புடவை

புளு புடவை

முதன் முதலில் நான் என்ன கலர் சேலை கட்டி இருக்கேன்னு கேட்டாங்க.. நான் வெள்ளை கலர் சேலைன்னு சொன்னேன். ஆனால் , அது வெள்ளை கலர் பார்டர் புளு கலர் புடவையாம் சார்னு சொல்லிட்டு சிரிச்சார் அந்த மாப்பிள்ளை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+