கேமராமேன் ரூமில் அந்த நடிகை.. ஆடிப்போன பெரிய டைரக்டர்.. அட்ஜெஸ்ட்மென்ட் "கிராமிய" நடிகர்.. இது நிஜமா
சென்னை: தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட்கள் என்பது இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அன்றைய காலகட்டத்தைபோல் இல்லாமல், தற்போது குறைந்துள்ளதாகவும், இப்போதுள்ள நடிகர், நடிகைகள், தெளிவாகவும், புத்திசாலியாகவும், எதையும் கூர்ந்து கவனிக்கக்கூடியவர்களாகவும் இருப்பதாகவும் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் Reflect Prime என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், சினிமா துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

குறிப்பாக,"அட்ஜஸ்ட்மென்ட் செய்வதால் வாய்ப்புகளை பெறுவது நடக்கிறது.. சினிமா என்றில்லை, எல்லா துறைகளிலும் இப்படியான குடைச்சல்கள், அட்ஜஸ்ட்மென்ட் இருக்கத்தான் செய்கின்றன..
2 பிரபல நடிகர்கள் :
அன்று 2 நடிகர்கள் உச்சத்தில் இருந்தபோது, அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஒப்புக் கொள்ளும் நடிகைகளை, தங்களுக்குள் பரிமாறி கொள்வார்கள்.. நான் சொல்லும் இந்த இருவரில் ஒருவர், தற்சமயம் நடிப்பது கிடையாது. இன்னொருவர் தமிழ், தெலுங்கில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.. அந்தவகையில், ஹீரோயினை முடிவெடுப்பதே சில ஹீரோக்களாக அன்று இருந்தார்கள்.
இப்படித்தான் அன்று ஒரு ஹீரோ கிராமிய மணத்துடன் நடிக்கக்கூடியவர்.. எலும்பு கடித்தே புகழ்பெற்றவர்.. அன்று தன்னுடைய படத்துக்காக, அந்த குறிப்பிட்ட நடிகைதான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, கடைசியில் அந்த படம் சரியாகவே போகவில்லை. இப்போதெல்லாம் நடிகர், நடிகைகள் தெளிவாகவும், உஷாராகவும் உள்ளனர்" என கூறியிருந்தார்.
பெரிய டைரக்டர்:
அதேபோல, இதே Reflect Prime என்ற யூடியூப் சேனலுக்கு மற்றொரு பேட்டியை தந்திருந்த சபிதா ஜோசப், பிரபல டைரக்டர் ஒருவரை பற்றி கூறியிருக்கிறார். "அவர் ஒரு மிகப்பெரிய டைரக்டர்.. நிறைய பேருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கியவர்.. நடிகர், நடிகைகளுக்கு புதுப்புது பெயர்களை வைத்தவர்.. ஒரு படத்தில் அந்த இயக்குனரே ஹீரோவாக நடித்து கொண்டிருந்தார். அதே படத்தில் நடிக்கும் ஹீரோயின் அவருக்கு பிடிகொடுக்காமல் நழுவி நழுவி கொண்டிருந்தார். அத்துடன், அப்படத்தின் கேமராமேன் ரூமிலேயே அந்த நடிகை இருப்பதை பார்த்து கடுப்பானார் டைரக்டர்.
உடனே அந்த கேமராமேனை தன்னுடைய அந்த படத்திலிருந்து மட்டுமல்ல, தன்னுடைய யூனிட்டிலேயே தூக்கிவிட்டார். அத்துடன் அந்த ஹீரோயின் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யாவிட்டால், ஷூட்டிங் நடக்காது என்றும் கண்டிப்பாக சொல்லிவிட்டாராம். 4 நாட்கள் கழித்தே, சில நடிகர்கள், டெக்னீஷியன்கள், அந்த பெண்ணிடம், இதனால தங்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விடும் என்று கெஞ்சினார்களாம்.. அதற்கு பிறகே அந்த நடிகை ஒப்புக் கொண்டு, ஷூட்டிங் தொடர்ந்தது.
ஜென்டில்மேன் டி.ராஜேந்தர்
ஆனால் நான் பார்த்து வியக்கும் டைரக்டர் டி,ராஜேந்தர்தான்.. அவரது படங்களிலும் அந்த கால படம் போலவே, மரங்களை சுற்றியேதான் பாடல்கள் இருக்கும். மும்தாஜ் உடன் நடிக்கும்போதும், டீசன்ட்டாக நடித்திருப்பார். வேறொரு நபரை மனைவி காதலித்திருந்தாலும், அவரது நல்ல உள்ளத்துக்காகவே அவரை திருமணம் செய்து கொணடார்.
அக்மார்க் நல்ல டைரக்டர் என்றால் அது டி.ராஜேந்தர்தான். சினிமா துறையில் பலரும் இதை சொல்லி நான் கேள்விப்பட்டுள்ளேன்" என்றெல்லாம் அந்த வீடியோவில் சபீதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்குழு அமைக்கப்படுமா?
இதுபுறமிருந்தாலும், சமீபத்தில், கேரளாவில் 233 பக்கங்கள் கொண்ட, ஹேமா கமிட்டியின் அறிக்கையானது பெரும் புயலை கிளப்பியிருந்தது.. இதையடுத்து மலையாள திரைத்துறையில் பெண்கள் மீது அரங்கேற்றப்பட்டிருக்கும் பாலியல் சுரண்டலைப்போல தமிழ்த் திரைத்துறையிலும் இதுபோன்ற சிக்கல்களை பெண் கலைஞர்கள் சந்தித்துக்கொண்டு இருப்பதாகவும், மல்லுவுட்டைப்போல டோலிவுட், கோலிவுட்டிலும் விசாரணைக்குழு அமைத்து பகிரங்கப்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தவாறே உள்ளன.
ஆனால், நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையானது, தமிழ் ஊடகங்களில் இதுவரை பேசுபொருளாகவில்லை.. அது அதிகமாக விவாதிக்கப்படவும் இல்லை.. சினிமாவுக்குள் அரசியலும் கலந்துள்ளதோ என்ற சந்தேகங்களும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருப்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications