Roja Serial: வாவ்.. ரோஜா சீரியலின் இங்கித ரொமான்ஸ்... ரசிக்க வைக்குதே!
சென்னை: சன் டிவியில் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் குடும்பம் முழுவதுமாக உட்கார்ந்து பார்த்தாலும் ரொமான்ஸ் இங்கிதமாக இருக்கிறது.
எந்த காட்சியும், வசனமும் உறுத்தாமல் இருப்பது காட்சிக்கு பிளஸாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.
வசனங்கள் அவரவர் பேசும் பாணிக்கு ஏற்ப எழுதியது போல இருக்கிறது.

வசனங்களும் காட்சிகளும்
ரோஜா சீரியலின் காட்சிகளும் வசனங்களும்... பாட்டி பேசுகிறார் என்றால் பாட்டி பேசுவதற்கு ஏற்ப, அம்மா பேசுகிறார் என்றால் அம்மா பேசுவதற்கு ஏற்ப பேரன் பேசுகிறார் என்றால் பேரன் ஆங்கிளில் இறங்கி வந்து இப்படி அவரவர்க்கு ஏற்ப வசனங்கள் எழுதி இருப்பது பாராட்டுவதற்கு உரியதாக இருக்கிறது. காட்சி அமைப்புகளும் அப்படித்தான் இருக்கின்றன.

ரோஜா சீரியல்
சினிமா பாணியில் ரோஜா சீரியல் ஷூட் செய்யப்பட்டு குறைந்த மணி நேரமே சன் டிவியில் ஒளிபரப்ப பட்டு வந்தாலும் ரொம்ப கலர்ஃபுல்லாக அதே சமயம் அரை மணி நேரத்துக்கு விளம்பரம் போக 20 நிமிடம் என்று வைத்துக் கொண்டாலும் ஃபுல்ஃபில்லாக கதையைத் தருகிறார்கள்.

டெலிவிஷனில் கதை
டெலிவிஷனில் இப்படிப்பட்ட கதையை சீரியலாக ஒவ்வொரு நாளைக்கும் இப்படி தருவது என்பது கூர்ந்து கவனித்து பார்க்கும்போது அப்படி இருப்பதில்லை. ஜனரஞ்சமாக பார்க்கும்போது இப்படி எல்லாவிதத்திலும் ரோஜா சீரியல் தகுதியானதாக இருக்கிறது. அர்ஜுன் குடும்பத்துக்குளேயே கதை ஒவ்வொரு நாளும் முடிந்தாலும் நன்றாக இருக்கிறது.

இங்கிதமான ரொமான்ஸ்
சீரியலில் ரோஜா அர்ஜுன் இளம் ஜோடிகள் கொள்ளை அழகு. ரோஜா தூங்கும்போது ஒண்ணு தந்தியே என்று அவன் போட்டு வாங்குவதும்,. இந்த இடத்தில் அவன் இரவு என்கிற வார்த்தையை கூட உபயோகிக்கவில்லை.நான் ஒண்ணும் தரலை சார்னு ரோஜா சொல்வதும்.. இல்லை ரோஜா எனக்குத் தெரியும்.. அதை இப்போ திரும்பி குடுன்னு இவன் சொல்வதும்.. அந்த கறை போகலை சார் எப்படி திரும்ப தர முடியும் இவள் சொல்வதும்..

இவன் கேட்க
அப்படியா.. அது என்ன கறை ரோஜான்னு இவன் கேட்பதும்.. என் மேல அக்கறை இருந்தா கண்டு பிடிங்க சார்னு அவள் ஓடுவதும்.. இப்படி முகம் சுளிக்காதபடியான ரொமான்ஸ் பரவாயில்லைன்னு தோணுது. ரசிக்கற மாதிரியும் இருக்குது. இப்படியே கண்டினியூ பண்ணுங்கப்பா.. நல்லாருக்கு.


Click it and Unblock the Notifications
