Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாலி- எம்.எஸ்.விஸ்வநாதன் கம்போஸிங்கிற்கு அழைத்த கே.பி.! பெனடிக்ட் சொல்யூஷனை விட்டு வைக்காத சுஜாதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு எங்கேயும் எப்போதும் பாடல் கம்போஸிங்கில் கவிஞர் வாலி, எம்.எஸ்.விஸ்வநாதன் கலந்து கொண்ட போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை எழுத்தாளர் சுஜாதாவை தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எழுத்தாளர் சுஜாதா பற்றி நினைக்கும் போதெல்லாம் அவர் எழுத்துக்களின் சுவாரசியங்கள், அதில் தரும் தகவல்கள் நம்மை வியப்படைய செய்து விடும்.

television Sujatha

கற்றதும் பெற்றதும் எழுதும் போது இடக்கைப் பரிசு என சிலருக்கு பரிசு கொடுத்து, அது எதற்கு என்றும் எழுதுவார். 'இந்த வார இடக்கை பரிசு பெறுபவர் கௌதம் மேனன். அவரது 'வேட்டையாடு விளையாடு' படத்தில் அதிக கொலைகள் வந்த படம். (18 உடல்கள்...எண்ணினேன்) என எழுதி இருக்கிறார்.

தகவலை வேட்டையாடு விளையாடு படத்தை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சிவாஜி படத்தில் ரஜினி வயரை கடித்து அவர் உடல் Freezing நிலைக்கு சென்று விடும். பின் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அவர் பிழைத்து எம்.ஜி.ஆராக வருவார்.

இது சாத்தியம் என நம்மை நம்ப வைக்க அதை எழுதியது சுஜாதா என்பது தான் துருப்பு சீட்டு. 'நினைத்தாலே இனிக்கும்' படத்தின் கதை, வசனம் சுஜாதா எழுதினார். அப்போது பாடல் கம்போஸிங் அன்று சுஜாதாவும் அங்கு சென்றிருக்கிறார்.

அதைப்பற்றி அவர் எழுதுகிறார்... 'நினைத்தாலே இனிக்கும்' படத்துக்கு நான் வசனம் எழுதினேன். சங்கீதக் கச்சேரி செய்ய சிங்கப்பூர் செல்லும் இரண்டு இளைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப் பற்றிய கதை. ரஜினி, கமல் நடித்தனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசன் பாடல் எழுதினார். பாடல் கம்போஸிங் ப்ரசிடென்ஸி ஹோட்டலில் நடந்தது. "நீங்களும் வாருங்கள்..கண்ணதாசனும், விஸ்வநாதனும் சேர்ந்து பணிபுரிவதை பார்க்கவே சுவாரசியமாக இருக்கும்" என்றார் பாலச்சந்தர். சென்றேன்.

முதலில் ஆர்மோனியப் பெட்டி வந்தது. பின் விசு வந்தார். பின் பட்டன் அழுத்தி டிபன் வந்தது. கடைசியாக கசங்காத வெள்ளை உடையில் கவிஞர் வந்தார். நெற்றியில் குங்குமப்பொட்டு. மெலிதான அழுந்த வாரிய தலைமுடி. தாராளப் புன்னகை. 'பெனடிக்ட் சொல்யூஷன்' வைத்து சர்க்கரை இருக்கிறதா எனப் பார்த்து விட்டு தான் காபிக்கு சர்க்கரை போடச் சொன்னார்.

"விசு என்ன ட்யூன்?"
"அண்ணே சங்கீதத்தைப் பற்றிய உற்சாக ட்யூன்.."
"வாசி.."
விசுவநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ வசீகரமான குரலில் "தன்னானே தன்னானே தன்னானே தன்னானே" எனப் பாடினார். உடனே கவிஞர் "எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்..பாடிப் பாரு.."
"கச்சிதமா இருக்கு கவிஞரே..."
இடையில் கவிஞரிடம் பேச்சுக் கொடுத்தேன். "எப்படி வார்த்தைகள் இவ்வளவு சரளமாக விழுது..." "தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சிட்டா போதும்..பாருங்க சீதைக்கு எத்தனை பெயர்கள். சீதா-நேர் நேர், ஜானகி- நேர்நிரை, ஜனகா-நிரைநேர், வைதேஹி-நேர்நேர் நேர்...இப்படி எந்த சந்தம் வேணுமோ. அந்த சந்தத்துக்கு வார்த்தை போட்டுக்கலாம்...என்ன எல்லா வார்த்தைகளும் தெரிஞ்சிருக்கணும்... அவ்வளவு தான்.

கம்பராமாயணத்தில் அவ்வளவு வார்த்தைகள் ஒவ்வொரு படலத்திலும் கிடைக்கும்.." இது சுஜாதா, தான் கவிஞரை சந்தித்த நிகழ்வை சொல்லும் கட்டுரை. எவ்வளவு விஷயங்களை சொல்லி இருக்கிறார் பாருங்கள். கவிஞர் 'பெனடிக்ட் சொல்யூஷன்' வைத்து தன் சுகர் அளவை அறிந்து அதன் பின் காபியில் சர்க்கரையை பயன்படுத்துகிறார். பெனடிக்ட் சொல்யூஷன் என்ன என்பதுவும், நேர்நேர், நிரைநேர் சீதா பெயர்கள் எல்லாம் நாம் தேட சுஜாதா தந்த விஷயங்கள்.....

சினிமாவே எழுதினாலும் அதில் ஏதாவது ஒரு சிறு விஷயம் அல்லது தகவல் இருக்க வேண்டுமென முடிந்தவரை நான் முயல்வது 'வாத்தியார் சுஜாதா' கற்றுத் தந்த பாடம்... இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+