புசுபுசுன்னு இருந்த யமுனாவா இது.. சிக்குன்னு ஸ்லிம் ஆயிட்டாரே இந்த அழகு "பேய்"!
சென்னை: சினிமாவில் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக நடித்து விட்டு தற்போது சின்னத்திரையில் அதுவும் ஜீ தமிழில் யாரடி மோகினி சீரியலிலும் கலக்கிக் கொண்டிருக்கும் யமுனா தற்போது இணையதளங்களிலும் போட்டோ ஷூட் நடத்தி வைரலாக பரவி வருகிறார்.
யாரடி நீ மோகினி சீரியலில் பேய் சித்ரா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் யமுனா திரைப்படங்களில் இல்லாத அளவிற்கு இந்த சீரியல் மூலமாக ரசிகர்களை பெற்றிருக்கிறார்.
இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு பெண்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் ரசிகர்களாக கிடைத்திருக்கிறார்கள். வெளியே எங்கும் செல்லும் போதும் பல குழந்தைகள் செல்பி எடுப்பது ஆசையாக கேட்கிறார்களாம்.

ஆசையாக கேட்கிறார்கள்
அதுவும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் காண்பிப்பதற்காக உங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் ஆசையாக கேட்கிறார்களாம். அந்த அளவிற்கு இவர் நல்ல பேயாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார். இவர் சினிமாவில் க்கு வருவதற்கு காரணம் இவரின் அம்மாதானம். அவருக்கு நல்ல நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால் நிறைவேறவில்லை.

அம்மாவின் ஆசை
இதையடுத்து யமுனாவையும் அவரது சகோதரியும் நடிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காகவே இவர்கள் இருவரும் சின்ன வயதில் இருந்தே டான்ஸ் கிளாஸ் சென்று இருக்கிறார்கள். இவர் பதினாறு வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். பல மொழிகளில் நடித்து இருந்தாலும் வெயில் படம் மூலமாக தமிழில் தமிழக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார்.

வெயிலில் அறிமுகம்
வெயில் படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தாலும் அது அந்த அளவுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் சீரியல்களில் நடிப்பதற்கு முடிவெடுத்திருக்கிறார். அதுவும் இந்த சீரியலில் இவர் பேயாக நடிப்பதால் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் நடிக்கிறாராம். இருந்தாலும் இதற்கு இருக்கும் வரவேற்பை பார்க்கும்போது இவருக்கு நன்றாக இருக்கிறதாம்.

பேயாக நடிப்பது கஷ்டம்
பறப்பது போன்று கயிறு கட்டிக்கொண்டு நடிப்பது தான் இவருக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறதாம். ரசிகர்கள் தொடர்ந்து கொடுக்கும் ஆதரவுக்காக நடிக்கிறாராம் .கொஞ்ச நாளா இவர் இந்த சீரியலில் இல்லாமல் இருந்திருந்தார். ஆனால் இப்போ மறுபடியும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இவர் முத்தரசு விடம் பேசுவதுபோல ஒரு சீன் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது இவருடைய ரசிகர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறதாம்.

சினிமா - சீரியல் வித்தியாசம்
சினிமாக்களிலும் சின்னத்திரையிலிருந்து நடிப்பதற்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். சீரியல்களில் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியதிருக்கிறது. சினிமாக்களில் நடிக்கும் போது கிடைத்த அனுபவங்களும் சீரியல்களில் தான் நடிக்கும் போது கிடைக்கிறது என்றும் கூறியிருக்கிறார் .

சிரிப்பு வராதுப்பா
இவருக்கு காமெடி சீன்களில் நடிப்பதுதான் கொஞ்சம் கூட வராதாம். அதை எப்படி நடிக்க வேண்டும் என்றும் தனக்கு அடுத்தவர் காமெடி சொன்னால் சிரிக்க மட்டும்தான் தெரியும். அதனால் அந்த மாதிரி இடத்திலிருந்து நடிக்க முடியாது என்று கூறி இருக்கிறார். இவர் இப்போ இணையத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

ஸ்லிம்மாகி விட்டார்
சினிமாக்களில் நடிக்கும் போது கொஞ்சம் புசுபுசுன்னு இருந்த இவர் இப்போ இந்த லாக் டவுன்ல எக்சர்சைஸ் செஞ்சி படு ஸ்லிம்மாகவும் கவர்ச்சியாகவும் மாறியிருக்கிறார் .அவர் விதவிதமாக போட்டோ எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணி கொண்டு இருக்கிறார் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications