நிரூப் முதுகில் குத்தினாரா.. லவ் பிரேக் அப் குறித்து யாஷிகா ஓபன் டாக்!.. ஓ இதுதான் விஷயமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கும் நிரூப்புக்கும் இடையே காதலில் பிரேக் அப் ஏற்பட்டதாக நடிகை யாஷிகா ஆனந்த் ஓபனாக தெரிவித்துள்ளார்.

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்தவர் யாஷிகா. இவர் அந்த படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.

அங்கும் அரை ட்ரவுசரில் சுற்றியதால் அங்கு ரசிகர்கள் யாஷிகாவுக்கு ஆதரவு கொடுத்தனர். பின்னர் பிக்பாஸிலிருந்து வெளியே வந்த யாஷிகா ஜோம்பி எனும் படத்தில் நடித்திருந்தார்.

தொலைகாட்சி தொடர்

தொலைகாட்சி தொடர்

இதையடுத்து அவர் தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில்தான் மாமல்லபுரத்தில் ரிசார்ட்டில் ஒரு இரவு நேர விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் அவருடைய தோழி பலியானார். யாஷிகாவுக்கு கால்முறிவு ஏற்பட்டு ஏற்பட்டது.

மருத்துவமனை

மருத்துவமனை

பல மாதங்கள் மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக இருந்த யாஷிகா மெல்ல தேறி தனது பழைய நிலையை அடைந்தார். சீசன் 5 போட்டியாளரான நிரூப்புடன் யாஷிகாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் லிப் லாக் ஆன காட்சிகள் வைரலாகின. இதையடுத்து இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியானது.

பிக்பாஸ் சீசன் 5

பிக்பாஸ் சீசன் 5

பிக்பாஸ் சீசன் 5 இல் நிரூப்பிற்கு சிபாரிசு செய்தவர் யாஷிகாதான் என சொல்லப்பட்டது. இதை நிரூப்பும் ஒப்புக் கொண்டார். நிரூப் அண்மையில் யாஷிகாவுடனான பிரேக் அப் குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். இருவருக்குள்ளான உறவு குறித்து ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ள முடியவில்லை.

டயலாக் நான் சொன்னது

டயலாக் நான் சொன்னது

எனினும் எப்போதும் போல் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என நிரூப் தெரிவித்திருந்தார். இதுகுறித்து யாஷிகா செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் சொன்ன டயலாக்கை நிரூப் அவனது சொந்த டயலாக் போல் பேசியுள்ளான். பாய் பிரண்ட்,கேர்ள் பிரண்ட் இருப்பதெல்லாம் லவ் கிடையாது. முதுகில் குத்தினாலும் அவர்களுக்கு நல்லது செய்துவிட்டு போக வேண்டும். பிரேக்கப்பிற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். ஆனால் அதில் மிக முக்கியமானது என் மனம் காயப்பட்டது என யாஷிகா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+