"நான் காப்பிரைட்ஸ்லாம் கேட்க மாட்டேன்ப்பா"! கவுண்டமணி சொன்ன அந்த அட்வைஸ்! நெகிழ்ந்த யோகி பாபு
சென்னை: காமெடி நடிகர் கவுண்டமணி கூறிய அட்வைஸைத்தான் இதுவரை நான் கடைப்பிடித்து வருகிறேன் என யோகி பாபு தெரிவித்துள்ளார். அப்படி என்னதான் கவுண்டமணி அட்வைஸ் செய்திருப்பார் என்பதை பார்க்கலாம்.
நடிகர் கவுண்டமணி- செந்தில் காமெடியை இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரித்து விடுவோம். அன்றைய கால கட்டங்களில் இவர்களது காமெடிக்காகவே படங்கள் ஓடின என்பதை மறுக்க முடியாது. காலம் மாற மாற விவேக், வடிவேல், சந்தானம், சூரி, யோகி பாபு என காமெடியன்கள் வந்துவிட்டனர்.

ஆளாளுக்கு ஒரு ஸ்டைலை பின்பற்றுவார்கள். அதிலும் விவேக், எப்போதுமே தனது காமெடியில் மூடநம்பிக்கைக்கு எதிராக கருத்துகளை சொல்லி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவார். பெரும்பாலான காமெடியன்கள் கவுண்டமணியை பின்பற்றுவார்கள்.
அந்த வகையில் யோகிபாபு, கவுண்டமணியின் காமெடியை பின்பற்றுவதோடு அவரது அறிவுரைகளையும் பின்பற்றி வருகிறாராம். யோகிபாபு கூறுகையில், மூத்த காமெடி நடிகர்கள் எல்லாரையும் சந்தித்து பேசியிருக்கிறேன்.
அவர்களும் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்காங்க. குறிப்பாக கவுண்டமணி சார் சொன்ன ஒரு அறிவுரையைத்தான் இப்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். முதல்முறை அவரை சந்தித்த போது, தம்பி யோகி பாபு, நீ எதை நோக்கி ஓடுறியோ அதை நோக்கி ஓடிட்டே இரு. எவனாவது கூப்பிடுறான்னு திரும்பிப் பார்த்தா, உன்னைத் திண்ணையில உட்கார வெச்சுடுவாங்க. உன் இலக்கு மட்டும்தான் உன் கண்ணுக்குக் தெரியணும்'னு சொன்னார்.
சார்கிட்ட அவ்வப்போது பேசுவேன். அது போல் வடிவேல் அண்ணனும் கோலமாவு கோகிலா படம் பார்த்துவிட்டு என்னை ஆபீஸுக்கு வரச் சொன்னார். அவர்கிட்டயும் ரொம்ப நேரம் பேசியிருந்தேன். விவேக் சாரும் அந்த படத்தை பார்த்துவிட்டு என்னை அழைத்து பேசினார். அவருடன் பிகில், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். சந்தானமும் சூரியும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர் என யோகிபாபு தெரிவித்துள்ளார். இது பழைய பேட்டி என்றாலும் தற்போது வைரலாகி வருகிறது.
அது போல் மற்றொரு பேட்டியில் யோகிபாபு கூறுகையில் கவுண்டமணி சாரை வைத்துதான் எங்களின் பிழைப்பே ஓடுது. அவர் பேசிய வசனங்களைத்தான் சில காட்சிகளில் நான் பேசுகிறேன். இதை அவரிடமே சொன்னேன். அவரோ "அதுக்கென்னப்பா எடுத்து போட்டு பேசுப்பா. நான் என்ன காப்பிரைட்ஸா கேட்க போகிறேன்" என பெருந்தன்மையுடன் சொன்னதாகவும் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கூட்டத்தில் கூட்டமாக நின்றிருந்தவர் பாபு. அமீர் நடித்த யோகி படம் மூலம் யோகி பாபுவாக மாறினார். விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினார்.
தர்பார், ஜெயிலர் போன்ற படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளார். அது போல் ஜெயிலர் 2 விலும் நடித்து வருகிறார். வாரிசு படத்தில் கூட விஜய்யுடன் யோகிபாபு நடித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications