மறைந்த இயக்குநர் குடும்பத்தினருக்கு யோகிபாபு செய்த செயல்.. இப்படியும் மனிதர்கள் இருக்குறாங்களே! நெகிழ்ச்சி
சென்னை: கெணத்த காணோம் படத்தின் பிரஸ் மீட்டில் நடந்த ஒரு விஷயம் எல்லோரையும் நெகிழ வைத்தது. இந்த படத்தை இயக்கியது மறைந்த சுரேஷ் சங்கையா. 'ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்திய சோதனை' மாதிரி கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை நேர்த்தியாக சொல்லியவர். அவர் மறைவுக்கு முன்பே இந்தப் படம் முழுக்க ஷூட்டிங் முடிந்திருந்தது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அவர் திடீரென காலமானார். அதன் பிறகு அவரோட டீம் எல்லாம் ஒன்று சேர்ந்து படத்தை முடிச்சு இப்போ ரிலீஸ்க்கு ரெடி பண்ணிருக்காங்க.
இந்தப் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபேக்கா, மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி என பலரும் நடித்திருக்காங்க. இசை நிவாஸ் கே பிரசன்னா.

பிரஸ் மீட்டில் பேசும்போது யோகி பாபு ரொம்ப சென்டிமென்ட்டாக நினைவுகளை பகிர்ந்தார். "சுரேஷ் சங்கையாவை எனக்கு 'காக்கா முட்டை' காலத்திலிருந்தே தெரியும். 'ஒரு கிடாயின் கருணை மனு'ல என்னை நடிக்க வைக்க நினைத்தார். ஆனா அப்போ தேதிகள் சரியில்லாததால் முடியல. அதுக்கப்புறம் என்னை ஹீரோவா வைத்து படம் எடுக்கணும் என்று இந்தக் கதையை கொடுத்தார். அது எனக்கு கிடைத்த பாக்கியம்," என்று சொன்னார்.
அவர் பேசிக்கொண்டே, "ஷாட்டுக்கு இடையில் பத்து நிமிஷம் கிடைச்சாலே அடுத்த கதையை சொல்ல ஆரம்பிச்சிடுவார். நல்ல இயக்குநரை நாம இழந்துட்டோம். ஆனா அவர் எப்போதும் நம்மோடதான் இருப்பார்," என்றார்.
அதோடு ஒரு முக்கியமான விஷயமும் நடந்தது. சுரேஷ் சங்கையா மறைவுக்கு பிறகு பிறந்த அவரது குழந்தையின் படிப்பு செலவுக்காக உதவி செய்வேன் என்று யோகி பாபு முன்பே சொல்லியிருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவே மேடையிலேயே காசோலையை சுரேஷின் மனைவி தனிஷ் பாத்திமா மற்றும் அவர்களின் மகளிடம் கொடுத்தார். "தொகை எவ்வளவு என்று வெளியே சொல்ல வேண்டாம்" என்று மட்டும் கேட்டுக்கொண்டாராம்.

இதுகுறித்து தனிஷ் பாத்திமா பேசும்போது, "நேற்று ட்ரெய்லர் வெளியீட்டுக்கு டைரக்டருக்குப் பதிலா என்னை அழைத்திருந்தாங்க. அங்கே யோகி பாபு சார் சின்னதா ஒரு உதவி என்று சொல்லி செக் கொடுத்தாங்க. நான் இதை எதிர்பார்க்கவே இல்ல. கடந்த ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் குழந்தைகளின் படிப்புக்கு உதவுவேன் என்று சொன்னதை இப்போ செய்து காட்டிருக்காங்க. அவருக்கு மனமார்ந்த நன்றி," என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.
ஒரு நல்ல இயக்குநரை இழந்த வேதனை இருக்கிறது. ஆனாலும் அவர் தொடங்கிய படத்தை அவர் டீம் முடித்து, அவர் குடும்பத்துக்கு ஆதரவு நின்றிருக்கும் இந்த சம்பவம் எல்லோருக்கும் ஒரு நல்ல உணர்ச்சியைத் தந்திருக்கிறது. 'கெணத்த காணோம்' படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், இந்த மனிதாபிமான செயல் படத்துக்கு இன்னும் ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications