பிரமோஷனுக்கு பணமா? உண்மைய சொன்னா வெட்கக்கேடு! நடந்தது இதுதான்! யோகி பாபு ஆதங்கம்
சென்னை: நடிகர் யோகி பாபு, வேதிகா நடித்த கஜானா திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் பிரமோஷனுக்கு யோகி பாபு வரவில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் கடுமையாக பேசியிருந்தார். யோகிபாபுவுக்கு 7 லட்சம் கொடுத்தால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பார், ஒவ்வொரு படமும் ஒரு நடிகனுக்கு குழந்தை மாதிரி என்று பேசி இருந்தார். இது குறித்து யோகி பாபு சமீபத்தில் நிகழ்ச்சியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
யோகி பாபு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்து காமெடியனாக நடிக்க தொடங்கியினார். இப்போது கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கஜானா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை என்று தயாரிப்பாளர் பேசியது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

உதவியாளருக்காக நடிப்பு
இந்த நிலையில் ஜோரா கையத்தட்டுங்கள் என்ற திரைப்படத்தில் யோகி பாபு நடித்திருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திற்கான வீடியோ வெளியிட்டு விழாவில் யோகி பாபு கலந்து கொண்டு பேசினார். அப்போது தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசும்போது என்னுடைய சம்பளத்தை நான் பிக்ஸ் பண்றது இல்லை. வெளியில் இருப்பவர்கள் தான் பிக்ஸ் பண்றாங்க, எனக்கு இப்போ எவ்வளவு சம்பளம் கொடுக்குறாங்க என்று எனக்கே தெரியவில்லை. அந்த நிலைமையில் தான் போய்கிட்டு இருக்கு.
நடந்தது இதுதான்
சம்பளத்தை கேட்டால் நாம எதிரி ஆகி விடுகிறோம், அதுதான் உண்மை. நான் நேற்றோ அதற்கு முன் தினமோ சினிமாவுக்கு வரவில்லை. ஆனால் யார் யாரோ என்னென்னமோ பேசுகிறார்கள். என்னுடன் நான்கு வருஷம் வேலை பார்த்த ஒரு தம்பி ஹீரோவா நடிக்க போவதாக சொன்னான். நானும் வாழ்த்தி அனுப்பினேன். அப்புறம் அதில் இரண்டு நாள் நடிக்கிறீங்களான்னு கேட்டான் நானும் நடித்துக் கொடுத்தேன்.
யோகி பாபு வருத்தம்
அந்த படத்துக்கு தான் 7 லட்சம் கேட்டேன் என சொல்கிறார்கள். ஜோரா கையை தட்டுங்க இந்த படம் என் படம். நான் தான் ப்ரோமோஷனுக்கு வரவேண்டும். வரவில்லை என்றால் என் தப்பு. எனக்கு சொன்னார்கள் வந்துவிட்டேன். இன்றைக்கு பெரியவர்கள் முன்னாடி சொல்கிறேன் எனக்கு எவ்வளவு பேர் பணம் தர வேண்டும் என தெரியுமா? லிஸ்ட் எடுத்து தரவா? உங்களால் வாங்கி கொடுக்க முடியும் என்றால் சொல்லுங்கள், எடுத்து தருகிறேன். பேசுபவர்கள் பேசட்டும் அவர்களை அந்த ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று யோகி பாபு கடைசியாக விரக்தியாக பேசியிருக்கிறார்.
கஜானா படத்தின் கதை
கே எம் ரியாஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இந்த படத்தின் கதையானது அழிந்து போன ஆதி உயிரினமான யாழி அனிமேஷன் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்டமான கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகச பயணத்தை வைத்து தான் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.இதில் கஜானாவை காப்பாற்ற போராடும் பேய்களின் அட்டகாசங்களும் காமெடியோடு திகழுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் மே பதினெட்டாம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications