Nayanthara: கோலமாவு கோகிலாவில் முதலில் நடிக்கவே முடியாதுனு நயன்தாரா சொன்னாங்க! யோகிபாபு ஓபன் டாக்!
சென்னை: கோலமாவு கோகிலா படத்தில் ஒரு சீனில் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முடியவே முடியாது என மறுத்தார். நான்தான் அவரிடம் புரிய வைத்து நடிக்க வைத்தேன். அப்போதும் கூட அவர் பட்டும்படாமல்தான் நடித்திருப்பார் என காமெடி நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.
கோலமாவு கோகிலா எனும் படம் 2018ஆம் ஆண்டு வெளியானது. இது நகைச்சுவை மிக்க சிறந்த படமாக விளங்குகிறது. படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமாருக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், ஆர்.எஸ்.சிவாஜி, சார்லஸ் வினோத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கான இசையை அனிருத் அமைத்துள்ளார்.
இந்த படம் தெலுங்கிலும் வெளியானது. இதன் பட்ஜெட் ரூ 8 கோடியாகும். ஆனால் இந்த படம் ரூ 73 கோடியை, அதாவது 8 மடங்குக்கு மேல் வருவாயை பெற்றுத் தந்தது. இந்த படத்தின் கதை என்னவெனில், கொக்கைன் எனும் போதை பொருள் மாபியா தலைவன் பாய் ஒரு காவலரை கொல்கிறான்.
கோகிலா நடுத்தர குடும்பத்தில் மூத்த பெண். அவர் வேலை தேடி அலைகிறார். அப்போது கொக்கைன் போதை பொருள் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். தாய் புற்றுநோய் பாதிப்பில் அவதிப்படும் நிலையில் பலரிடம் உதவிக் கேட்டும் கிடைக்காததால் அவரும் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்.
இதனிடையே இந்த கும்பலை பிடிக்க காவல் துறை அதிகாரி ஒருவர் ஈடுபடுகிறார். கோகிலா போதை பொருள் கடத்துவதை காவல் துறையிடம் யாரோ போட்டுக் கொடுத்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் இருவரையும் கொல்லுமாறு கடத்தல்காரத் தலைவனிடம் சொல்கிறாள் கோகிலா.
ஆனால் கடத்தல்கார தலைவனோ கோகிலாவிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிக்கிறான். அப்போது அவனை நயன்தாரா அடித்து விடுகிறார். இதனால் அவன் உணர்வில்லாமல் இருக்க 100 கிலோ கொக்கைனையும் கோகிலாவே கடத்த வேண்டும் என பாய் உத்தரவிடுகிறான். இந்த தடைகளையெல்லாம் மீறி கோகிலா தனது வாழ்க்கையில் வெல்கிறாரா என்பதுதான் கதை.
இந்த படத்தில் வடிவேல் பாலாஜி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சேகர் எனும் கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருந்தார். இவர் இந்த படம் குறித்து கூறுகையில், கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து கொண்டு நயன்தாரா என்னுடன் நடித்ததே பெரிய விஷயம்.
அந்தப் படத்தில் வேன் காட்சியில் ஸ்பீடு பிரேக் அடிக்கும் போது திடீர்னு பார்த்தா அவங்க கால் என் முகத்தின் மேல வச்சிருப்பாங்க. இந்த காட்சியில் அவர் நடிக்கவே மாட்டேன் என்றார். இந்த காட்சியை பார்த்தால் ஆடியன்ஸ் சிரிப்பாங்க, பரவாயில்லை, செய்யுங்க என அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தோம்.
அந்த காட்சியை கிட்டதட்ட 7 அல்லது 8 முறை டேக் எடுத்திருப்போம். ஆனால் நயன்தாரா ஒரு டேக்கில் கூட அவங்க காலை கீழே வைக்கல. வேஸ்லின் தடவி விட்டு காலை மேலயே வச்சிருந்தாங்க. ஏனென்றால் மண் என் முகத்தில் படக் கூடாதுன்னு அவங்க அப்படி பண்ணாங்க. அந்த மாதிரி அவங்க ஒரு சிறந்த நடிகை என யோகிபாபு பாராட்டியுள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications