Pandian Stores Serial: தம்பி அண்ணனை அடிக்கலாமா... கூடாதா? பாண்டியன் ஸ்டோர்ஸில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி சீரியல்கள் என்றாலே அழுகை, கோபம், பொறாமை இதை எல்லாம் தாண்டி வன்மம், கொலை, கொள்ளை என்று பார்க்கக் முடியாதபடி அவைகளில் காட்சிகள் நிறைந்து இருக்கும்.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் ஒருவர் தம்பி மூவர்..இவர்களில் ஒருவன் மட்டுமே கல்யாணம் ஆகாத பையன்.மற்ற மூன்று மருமகள்களும் தங்கது கணவர்கள் மாதிரியே ஒற்றுமையாக இருப்பது குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை நமக்கே உணர்த்துவதாக இருக்கிறது.

younger brother beats elder in pandian stores

தனக்கு அடுத்த தம்பியை பொண்டாட்டியுடன் சேர்ந்துகொண்டு புதிதாக பொய் சொல்லுகிறான் என்று அண்ணன் கோவமாக இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மளிகைக் கடைக்கு ஆள் வைத்து பொட்டலம் போடுவதை விட, வீட்டு பெண்களே பொட்டலம் போடலாம் என்று, மூன்று மருமகள்களும் இரண்டு நாட்களாக விடிய விடிய பொட்டலம் போடுகின்றனர். சரி மாமா இதுக்கு ஒரு நல்ல சன்மானம் தருவார்.நாம அதிக வாங்கலாம், இதை வாங்கலாம் என்று கனவு கொண்டு இருக்கையில், மூத்தவர் 100 ரூபாய் மட்டுமே தருகிறார்.

இதனால், இரண்டாவது மருமகள் மீனாவுக்கு கோபம் வந்துருது. என்ன ஜீவா இடுப்பு உடைய பொட்டலம் போட்டதுக்கு இதுதானா கூலின்னு கோபமா பேசறா.மறுநாள் என்னால் கடை வேலை செய்ய முடியாது.எனக்கு ஜுரம் வந்துருச்சுன்னு சும்மா நடிக்கறா. பெரியவர் ஜீவாவிடம், மீனாவை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போன்னு சொல்றார். ஜீவாவும் மீனாவை அழைச்சுகிட்டுப் போக, அப்போதுதான் தான் நடிச்சதை புருஷன்கிட்ட சொல்றா.

பின்னர் இருவரும் ஜாலியாக ஊர் சுற்றித் திரிந்துவிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை மூத்தவர் பார்த்து விடுகிறார்.தம்பி பொய் சொல்ல ஆரம்பித்ததை அவரால் ஜீரணிக்க முடியலை. வீட்டில் எல்லோரிடமும் சொல்லிவிட்டு, தம்பி ஜீவாவுடன் மட்டும் பேசாமலிருக்க, ஜீவாவுக்கு அண்ணன் ஏன் நம்ம கிட்ட பேசலேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு.

அண்ணனிடம் கேட்கிறான்.. அவர் கோவத்தில் பொய் சொல்ல துணிஞ்சுட்டியான்னு அடிக்கப் போக.. மாமா அது என்ன அடிக்கற பழக்கம். ஜீவா ஒண்ணும் சின்னப் பையன் இல்லைன்னு கத்தறா ஜீவாவின் மனைவி மீனா. அவள் பேச, இவன் பரிந்து பேச என்று சூழல் போக இந்த வீட்டில் எனக்கு என்ன மரியாதை என்று வெளியேறுகிறார் மூத்தவர்.

இன்னும் சந்தேகம் ஒண்ணு இருக்கு.. கூட்டு குடும்பமாகட்டும்..தனித்தனியாக வசிக்கும் அண்ணன் தம்பிகளாகட்டும் அண்ணன் தனது தம்பியை அடிப்பது தப்பா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+