'பரிதாபங்கள்' கோபிக்கு திருமண நிச்சயம்..மனசார வாழ்த்திய நண்பர்கள்

பரிதாபங்கள் கோபிக்கு, யமுனா என்கிற பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரிதாபங்கள் புகழ் கோபிக்கு திருமணம் நிச்சயம் நடைபெற்றுள்ளது. விரைவில் திருமணம் நடைபெற உள்ள தம்பதியினருக்கு நண்பர்களும் யூடியூப் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.5

மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் பரிதாபங்கள் எனும் தலைப்பில் வீடியோக்களை போட்டு காமெடி இரட்டையர்களாக அசத்தி வந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர்.

பின்னர் மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் இருந்து விலகிய இருவரும் பரிதாபங்கள் என தனியாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து ஏகப்பட்ட காமெடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார்கள்.

பரிதாபங்கள் வீடியோ

பரிதாபங்கள் வீடியோ

யூடியூப்பில் இவர்கள் பதிவேற்றிய வீடியோக்கள் அனைத்தும் இளசுகள் மத்தியில் ஃபேமஸ் ஆனதால், யூடியூப்பில் இருவரும் அசுர வளர்ச்சி கண்டனர். பேங்க் பரிதாபங்கள் தொடங்கி கொரோனா பரிதாபங்கள் வரை ஏகப்பட்ட பரிதாப வீடியோக்களை போட்டு ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர்.

சினிமாவில் பிரபலம்

சினிமாவில் பிரபலம்

இவர்களின் வீடியோக்கள் வெளியான உடனே மில்லியன் கணக்கில் வியூக்களை அள்ளி யூடியூபில் டிரெண்டாகி விடும். சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் கோபி மற்றும் சுதாகருக்கு உள்ளனர்.
இதையடுத்து இவர்களுக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அந்த வகையில் ஹிப் ஹாப் ஆதி இயக்கிய மீசைய முறுக்கு, யாஷிகாவுடன் ஜாம்பி போன்ற படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தனர்.

மணி கம் டுடே, கோ டுமாரோ

மணி கம் டுடே, கோ டுமாரோ

குரூப் ஃபண்டிங் மூலம் சுமார் 6.5 கோடி நிதி திரட்டி "மணி கம் டுடே, கோ டுமாரோ எனும் படத்தை ஆரம்பித்தனர். ஆனால், இன்னமும் அந்த படம் பல்வேறு காரணங்களால் நிறைவு பெறவில்லை. விரைவில் அந்த படம் எடுத்து முடிக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

 பரிதாபங்கள் சுதாகர் திருமணம்

பரிதாபங்கள் சுதாகர் திருமணம்

இதனிடையே பரிதாபங்கள் சுதாகருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில், கோபிக்கு எப்போது திருமணம் நடக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு தற்போது விடை கிடைத்துவிட்டது.

பரிதாபங்கள் கோபிக்கு நிச்சயம்

பரிதாபங்கள் கோபிக்கு நிச்சயம்

பரிதாபங்கள் கோபிக்கு, யமுனா என்கிற பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. விரைவில் திருமணமும் நடைபெற உள்ளதாம். நிச்சயத்தின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. பரிதாபங்கள் கோபிக்கு திருமணம் நிச்சயம் ஆன செய்தியை அறிந்த ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+