Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருங்கைக் காய் சேர்த்த காடை கார கறி... கலக்கும் "யூ ட்யூப் டாடி".. ஆறுமுகத்தின் கைவாசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காய்களில் முருங்கைக் காய் போட்டு சாமாபார் வைத்தும் அது ருசிக்கவில்லை என்றால், அவர்களுக்கு சுத்தமாக சமையல் தெரியாதது என்றுதான் அர்த்தம். காரணம் முருங்கைக்காய் மகிமை. அப்படி.

சைவ சமையலில்; முருங்கைக் காய், கத்திரிக்காய், மாங்காய் சேர்த்து,கூட்டு காய்கறிகள் சாம்பார் வைப்பார்கள். இல்லை என்றால், வெறும் முருங்கை காய் சாம்பார் வைப்பார்கள். எப்படி முருங்கைக் காயை சமைத்தாலும் ருசியாக இருக்கும்.

முருங்கைக் காயுடன் சேர்த்து அசைவ சமையல் எனும்போது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஏற்கனவே மீன் குழம்பில் மாங்காய் சேர்ப்பது, உருளைக் கிழங்கு சேர்ப்பது வழக்கம்தான்.

கலக்கும் வீடியோ

கலக்கும் வீடியோ

டாடி சமையல் என்று உலகத் தமிழர்கள் மத்தியில் புகழ் பெற்ற ஆறுமுகம் ஐயாவின் சமையல் வீடியோக்களை சன் டிவி வணக்கம் தமிழாவின் ஒரு பகுதியாக தினம் காலையில் ஒளிபரப்பி வருகிறது. இதில் இன்று முருங்கைக் காய் சேர்த்து, காடை முருங்கை காய் கறி என்று டாடி சமையல் வீடியோ ஒளிபரப்பானது.

சமையல் சமையல்

சமையல் சமையல்

இந்த வயதான காலத்திலும் விதம்விதமாக சமையல் செய்து, உலகம் முழுக்க புகழடைந்து, அவரின் சமையல் வீடியோவை பார்த்து ரசித்து ஆதரவு தந்து வருகிறார்கள்.இன்று லட்சம் லட்சமாக சம்பாதித்து வருகிறார் டாடி ஆறுமுகம். இந்த ஐடியா என்னவோ மகனுடையதுதான் என்றாலும் சமைப்பது என்னவோ டாடி ஆறுமுகம்தான்.

வட நாட்டுக்கு

வட நாட்டுக்கு

ஆரம்ப காலத்தில் டெல்லி, உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் என்று வட மாநிலங்களுக்கு போய் சமையல் செய்து பிழைப்பு நடத்தி இருந்திருக்கிறார் ஆறுமுகம். அங்கு போர் வெல் வண்டிகள் தமிழ் நாட்டில் இருந்துதான் வட மாநிலங்களுக்கு செல்லும்.சீசன் முடிந்த நிலையில் தமிழ் நாட்டுக்கு வந்துவிடுவார்கள். அப்படி செல்பவர்களுக்கு சமையலுக்கு என்று ஆட்கள் தேவைப்படும்.

இப்படி வகையில்

இப்படி வகையில்

டாடி ஆறுமுகமும் பிழைப்புக்காக இப்படி வட மாநிலங்களுக்கு சமையல்காரராக சென்று வந்தவர்தான்.மகன் இன்றைய இன்டர்நெட் டிரண்டுகளை உபயோகப் படுத்தி, யூ டியூப் சேனல் ஆரம்பித்து, தனது அப்பாவை சமையல் செய்ய வைத்து, அந்த வீடியோவை யூ டியூபில் ஒளிபரப்பி இருக்கிறார்.
டாடி ஆறுமுகம் வித்தியாசம் வித்தியாசமாக அசைவ சமையல் செய்வது, அதை பின்னர் அவர் தான் செய்த சமையலை ருசித்து சாப்பிடுவது என்று எல்லாவற்றையும் பார்த்த மக்களுக்கு டாடி ஆறுமுகம் சமையல் பெரும் ஆர்வத்தைத் தூண்டி உள்ளது.

இதைத் தெரிந்துக் கொண்ட சன் டிவி வணக்கம் தமிழாவில் மிக சிக்கனமாக இந்த வீடியோவை பயன்படுத்திக் கொள்கிறது.என்றாலும், டாடி ஆறுமுகத்துக்கு இது இரட்டிப்பு வரவு, மகிழ்ச்சிதான்.

காடை முருங்கைக் காய்

காடையையும், அத்துடன் சேர்த்து சமைத்த முருங்கைக் காயையும் ருசித்து சாப்பிட்ட டாடி ஆறுமுகம், காடையில் கோழியில் இருப்பதைவிட கொழுப்பு சத்து ரொம்ப ரொம்ப கம்மியாக இருக்கிறது. வயதானவர்களும் பயமின்றி சாப்பிடலாம் என்கிறார். அவர் சமைப்பதை விட சமைத்துவிட்டு சாப்பிடுவதை மக்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+