2 வருஷத்துக்கு முன்னாடி பேசியது! அதவச்சு இன்னும் எவ்ளோ நாள் பேசுவீங்க! விஜே அர்ச்சனா மகள் சீற்றம்
சென்னை: இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என் வயது முதிர்ச்சியை பற்றியே பேசுவீர்கள் என விஜே அர்ச்சனாவின் மகள் ஸாரா கோபமாக ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.
சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி உள்ளிட்ட பல்வேறு சேனல்களில் பணியாற்றியவர் விஜே அர்ச்சனா. இவரது மகள் ஸாராவும் தாயுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தாயும் மகளும் சமூகவலைதளங்களிலும் மிகவும் பிரபலமானவர்கள்.

அர்ச்சனா மகள் ஸாராவின் பதிவுகளுக்கு சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுப்பார்கள். அதிலும் அர்ச்சனா பிக்பாஸ் சென்ற போது அவரது செயல்பாடுகள் குறித்து நெட்டிசன்கள் ஏதாவது பதிவு போட்டால் ஸாரா பதிலடி கொடுப்பார்.
அது போல் இவர்கள் இருவரும் சேர்ந்து தனது யூடியூப் சேனலுக்கு நிறைய வீடியோக்களை செய்த நிலையில் இவர்களது பாத்ரூம் டூர் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கெல்லாம் யாரெல்லாம் தனது தாயை அசிங்கமாக பேசுகிறார்களோ அவர்களை எல்லாம் ஸாரா கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுப்பார். மேலும் சில விஷயங்களுக்கு அவரது வயதுக்கேற்றபடி பேசவில்லை என்ற விமர்சனங்களும் ஸாரா மீது உண்டு.
இப்படி ஒரு வாயாடியை பெற்று வைத்திருக்கிறார் அர்ச்சனா என்றெல்லாம் விமர்சனங்கள் வந்ததுண்டு. இந்த நிலையில் சமூகவலைதளங்களில் இந்த பெண்ணை பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை, இந்த வயதில் பேச்சில் நிறைய முதிர்ச்சி இருக்கிறது என்றெல்லாம் விமர்சித்த நிலையில் ஸாரா பதிலடி கொடுத்துள்ளார்.
சமூகவலைதளங்களில் என்னுடைய முதிர்ச்சி குறித்து ஏன் இன்னமும் விவாதங்கள் நடத்தப்படுகின்றன? எங்களை தரக்குறைவாக பேசுவதை நிறுத்துங்கள். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட எனது நேர்காணலை ஒரு முன்னணி டிஜிட்டல் மீடியா மீண்டும் ஒளிபரப்பியுள்ளது. அதில் ஒரு ரீல்ஸின் தலைப்பு என்ன தெரியுமா, ஸாராக்கு இந்த வயசுல இவ்ளோ மெச்சூரிட்டியா என கேட்டுள்ளார்.
ஆனால் என்னை பலர் சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள். மேலும் சிலர் என்னை அவதூறாக பேசி வருகிறார்கள். எனது வாழ்வில் பல்வேறு தருணங்களில் மெச்சூரிட்டிக்கு நேரடி தொடர்பு உண்டு. எனக்கு 8 வயதாக இருந்த போது எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. நான் 11 ஆண்டுகள் என் தந்தையை விட்டு பிரிந்திருந்தேன். எனது தாய், தந்தைக்கு இடையே நடந்த பிரச்சினைகளை பார்த்துள்ளேன்.
என் தாய் மீது எந்த தவறுமே இல்லாத போது அவருக்கும் என் தந்தைக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. என் தாய்க்கு சர்ஜரி நடந்தது. அவர் மீண்டும் இயல்பு நிலை திரும்ப நான் அவருக்கு பக்கப்பலமாக இருந்தேன். இப்படி நிறைய கஷ்டங்களை பார்த்து வளர்ந்த என்னை பல்வேறு சமூகவலைதளங்களில் பலர் பல்வேறு விதமான கருத்துகளை நியாயப்படுத்துவதற்கு நன்றிகள்.
நான் பிரபலமாக இருப்பதால் பொதுமக்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளேன் என்பது எனக்கு நன்கு புரிகிறது. என் மீது அவதூறுகளை அள்ளிவீசிவிட்டு செல்வது என்பது எளிதான காரியம். ஆனால் இந்த மாதிரி மோசமான பதிவுகள் எல்லாம் என்னையும் என் குடும்பத்தையும் எப்படி காயப்படுத்துகிறது என்பது ஒரு நிமிடம் யோசித்து பார்க்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் தாண்டி உங்கள் அன்புக்கும் வெறுப்புக்கும் நான் கடமைப்பட்டவள். அன்புக்கு நன்றி, வெறுப்புணர்விலிருந்து விரைவில் சரியாகிவிடுவீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு ஸாரா தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது மனதை கஷ்டப்படுத்திய சில கமென்ட்டுகளை அவர்கள் டெலிட் செய்வதற்கு முன்பு ஸ்கிரீன் ஷாட் எடுத்துள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications