ஆஹா! திருமண உடையில் ஜாரா.. அப்பாவுக்கு பிடிக்காது.. அர்ச்சனாவிடம் கம்ப்ளைண்ட்! ஏன்?
சென்னை: தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் திருமண உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புடவை யாருடையது தெரியுமா?
1990-களில் தொகுப்பாளினியாக இருந்தவர் அர்ச்சனா. இவர் இளமை புதுமை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவருக்கு 2007 ஆம் ஆண்டு ஜாரா என்ற மகள் பிறந்தார்.
இவர் ஏகப்பட்ட ஷிட் நிகழ்ச்சிகளை கொடுத்துள்ளார். இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

செயல்பாடுகள்
ஆனால் இவரது செயல்பாடுகளால் மக்கள் மனதில் அதிருப்தியை சம்பாதித்தார். இதையடுத்து விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தொகுப்பு வழங்கினார். இவர் விரைவில் ஜீ தமிழ் தொலைகாட்சிக்கு தொகுப்பாளினியாக செல்கிறார். இவரும் இவரது மகள் ஜாராவும் தங்கை அனிதாவும் யூடியூப் சேனல் வைத்துள்ளார்கள்.

அர்ச்சனாவின் மகள் ஜாரா
அர்ச்சனாவின் மகள் ஜாரா சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவ்வாக இருப்பவர். பாத்ரூம் டூரின் போது நெட்டிசன்கள் அர்ச்சனாவை கடுமையாக விமர்சித்தபோதும் கூட ஜாராதான் உரிய முறையில் பதிலடி கொடுத்தார். அதுபோல் மகளை ஏன் டான்ஸ் ஆட வைத்து வீடியோ போடுகிறீர்கள் என அர்ச்சனாவிடம் கேட்போருக்கும் ஜாராவே தனது அக்கவுண்ட்டிலிருந்து பதில் கொடுப்பார்.

திருமண உடை
இந்த நிலையில் திருமண உடையில் இருப்பது போன்றதொரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஜாரா வெளியிட்டுள்ளார். சிவப்பு நிறத்தில் லெஹெங்கா உடை அணிந்து கொண்டு காதில் லோலாக்கு, நெத்திசுட்டி, கழுத்தில் நெக்லஸ்,மூக்கில் புல்லாக்கு போட்டுக் கொண்டு அசத்துகிறார்.

வீடியோ
இந்த வீடியோவை அர்ச்சனாவும் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காதலன் படத்தில் வரும் "கொல்லையிலே தென்னை வைத்து குருத்தோலைப் பெட்டி செஞ்சு சீனி போட்டு நீ திங்க" எனும் பாடல் ஒலிக்கிறது. திருமணத்தின் போது அர்ச்சனா அணிந்திருந்த ஆடையைத்தான் ஜாரா அணிந்துள்ளார்.

அர்ச்சனா
அந்த வீடியோவில் அர்ச்சனாவின் திருமண கோல புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. செல்லமான வெட்கத்துடன் ஜாரா சிரிக்கிறார். "என் மகள் எனது திருமண உடையில் ஜொலிக்கிறார். திருமண நினைவுகளை மீண்டும் உருவாக்கிவிட்டார். உங்கள் மகள் உங்களை போன்று இருக்கும்போது என்ற #whenyourdaughterislikeyou என பதிவிட்டுள்ளார்.

ஜாரா பதில்
அதற்கு ஜாரா, நான் பார்ப்பதற்கு உங்களை போல் இருப்பதற்கு காரணம் நான் அந்த அளவுக்கு உங்களை விரும்புகிறேன். ஆனால் அப்பாவுக்கு இது பிடிக்காது என்பது மட்டும் உறுதி என ஜாரா பதில் அளித்துள்ளார். இந்த வீடியோவை மைனா நந்தினி உள்ளிட்டோர் லைக்ஸ்கள் கொடுத்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications