அடேங்கப்பா... ஜீ தமிழிலும் கிழி கிழினு கிழிக்கப் போறாங்களாமே!
சென்னை: டிவிக்களை பொருத்தவரையிலும் நாளுக்கு நாள் சேனல்களின் வரத்து அதிகமாகி கொண்டிருக்கிறது.
அந்த மாதிரி பல பல சேனல்கள் உருவாகி கொண்டிருந்தாலும் ரசிகர்கள் மனதில் எப்பவுமே சில சேனல்களுக்கு நல்ல ஒரு வரவேற்பு இருக்கிறது . அந்த மாதிரிதான் ஜீ தமிழின் சேனலுக்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது .
இந்த சேனலில் சில நிகழ்ச்சிகள் பெரும் பரபரப்பாகவும் சில நிகழ்ச்சிகள் பெருமையாகவும் இருக்கும். அந்த வகையில் ஜீ தமிழில் ஞாயிற்றுக்கிழமை சூப்பர் ஃபேமிலி என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது.
ரசிகர்கள் எப்போதும் ஒரே சேனலை விரும்பி பார்ப்பதில்லை பல சேனல்களிலும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள் .பல வீடுகளில் இதற்காகவே ரிமோட் சண்டைகள் வருகின்றது .ஒவ்வொரு டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு என்று தனியாக ரசிகர்கள் இருப்பார்கள். அது போல அடிக்கடி ஜீ தமிழுக்கும் விஜய் டிவிக்கும் பெரும் போட்டி தான் வந்து கொண்டிருக்கும் .

விஜய் டிவி
விஜய் டிவியில் கேம் ஷோக்கள் மூலமாகவே பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம் .அந்த அளவுக்கு இந்த டிவியில் அடிக்கடி புதுப் புது கேம் ஷோக்களை நடத்தி வருவார்கள் .அதிலும் கலந்து கொள்ளும் பங்குதாரர்களும் நல்ல வரவேற்பு கிடைப்பதோடு அவங்களுக்கு நல்ல ஒரு எதிர்காலமும் அமைந்திருக்கிறது. அதேபோலதான் ஜீ தமிழில் சில நேரங்களில் கேம் ஷோக்களை நடத்தி வருகிறார்கள்.

ஜீ தமிழிலும் கேம் ஷோ
அந்த மாதிரிதான் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜீ தமிழில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் சேர்ந்து ஒரு கேம் ஷோவில் கலக்க போகிறார்களாம். இந்த கேம் ஷோவுக்காக புரோமாவும் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது .இந்த டிவியில் உள்ள ரசிகர்களின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. அனைத்து சீரியலில் நடிகர் நடிகைகளும் இதில் ஒன்றாக காணப்படுவதால் அவர்களுக்கும் கொண்டாட்டமாக தான் இருக்கிறதாம். தொடக்கத்திலேயே போட்டி காமெடியாகவும் வெறித்தனமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

வாராவாரம் ஆரவாரம்
அக்டோபர் 4 முதல் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு முப்பது மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என்று பிரோமா வெளியிடப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் எல்லாம் இதில் வெற்றி பெற வேண்டுமென்று ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருக்கிறதாம்.

செம ஜாலி
இவ்ளோ நாளா ஃபேமிலி ஷூட்டிங் என்று பிஸியாக ஒரே லெவலில் நடித்துக்கொண்டிருந்த இவர்களுக்கு ஸ்கூல் பிள்ளைகளுக்கு சம்மர் லீவுக்கு டூர் கூட்டிட்டு போனா எப்படி நல்லா இருக்குமோ அந்த அளவு இருக்கு நல்லா இருக்கிறது என்று யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்வேதா கேரக்டரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் இதில் வெற்றி தோல்வி எல்லாம் எங்களுக்கு பெருசு கிடையாது.

டைம் பாஸ் ஆகும்
நாங்களும் கலந்து கொண்டால் போதும் இதில் ஜாலியாக டைம் பாஸ் பண்ணனும் நாங்களும் ஜாலியாகவே இருக்கணும் அதுதான் எங்களுக்கு வேண்டும் என்று கூறியிருக்கிறார். சீரியல்களில் பொருத்தவரையிலும் ஒவ்வொரு சீரியலுக்கும் டிஆர்பி ரேட்டிங்கை பொருத்தே பஸ்ட் இடத்திலும் இரண்டாம் இடத்திலும் மாறி மாறி சீரியல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ரசிகர்கள் பெரிதும் ரசிக்கப்படும் சீரியலுக்கு எப்பவுமே தனி மவுசு தான் இருக்கிறது.

நேரம் அதிகரிப்பு
அது போல கொஞ்ச நாளைக்கு முன்னாடி இரண்டு சீரியல்களை ஒன்றாக இணைத்து ஒரு மணிநேரம் ஒளி பரப்பி வந்தார்கள் இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் தற்போது இவர்கள் அனைத்து நடிகர்களும் ஒன்றாக சேர்ந்து கேம் விளையாடுவது இவர்களின் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள் .இவர்களின் ஆட்டம் எந்த அளவிற்கு இருக்கப் போகிறது என்று வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியும்
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications