எதிர்நீச்சலுக்கு போட்டியாக ஜீ தமிழில் தொடங்கப்படும் புது சீரியல்.. அதுவும் இவங்களும் இருக்கிறாங்களே!
சென்னை: முன்னணி தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான ஜீ தமிழ், "சின்னஞ்சிறு கிளியே" என்ற புதிய குடும்பத் தொடரை ஜூலை 21 முதல் ஒளிபரப்ப உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு இந்தத் தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும்.
இந்தத் தொடரின் மையக் கதை, இந்து (ஸ்வாதிகா) என்ற பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. பல்வேறு வேலைகள் செய்து தன் குடும்பத்தை அவள் காப்பாற்றுகிறாள். பைக் டாக்ஸி ஓட்டுதல், உணவு விநியோகம், டியூஷன் எடுப்பது எனப் பல வேலைகள் செய்து குடும்பத்தின் நிதிச்சுமையைத் தாங்குகிறாள்.

சின்னஞ்சிறு கிளியே சீரியல்
கந்துவட்டி தொழில் செய்யும் கிருபாகரன் (ரௌத்திரம் சையத்), பெண்கள் அடங்கி நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பெண்களிடம் பணம் போனால் குடும்பம் நாசமாகிவிடும் என்று நம்புகிறார். கிருபாகரனின் விசுவாசியான கர்ணாவுக்கும் (நரேஷ்) இந்துவுக்கும் நடக்கும் சந்திப்பு மோதலில் முடிகிறது.
சூழல் காரணமாக, கர்ணாவுக்கும் இந்துவுக்கும் திருமணம் நடக்கிறது. இந்து கிருபாகரன் வீட்டிற்கு வாழ வருகிறாள். இதுவரை சுதந்திரமாக சுற்றி வந்த இந்துவின் வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது? அவள் சிறகு உடைந்த பறவையாக சிறைக்குள் தவிப்பாளா அல்லது சிறையை உடைத்து விண்ணை நோக்கிப் பறப்பாளா என்பதே தொடரின் கதை.
எதிர்நீச்சல் சீரியல்
இந்தத் தொடரில் மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி உட்படப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். "சின்னஞ்சிறு கிளியே" சீரியல் இன்று ஜூலை 21 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஜீதமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலின் கதையைக் பார்க்கும் போது ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கதையைப் போல இருப்பதாக பலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

சீரியலின் ப்ரோமோ
சின்னஞ்சிறு கிளியே சீரியலின் ப்ரோமோவை பார்க்கும்போது இதுபோல இப்போதும் நடக்கிறதா? என்று சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக பெண்கள் வரதட்சணை கொடுமையால் அவதிப்படுவது மற்றும் பெண்கள் என்றால் வீட்டில் அடிமையாக இருக்க வேண்டும் என்று ஒரு மனநிலை இருப்பதை சில சம்பவங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதுபோல இந்த சீரியல் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை வெளிக்காட்டி பலருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications