For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூப்பர் ஜீ சூப்பர் ஜீ.. எங்கே போறீங்க?..அதைவிட முக்கியமான வேலை இருக்கு.. ஓட்டுப் போடுங்கஜி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

    சென்னை: ஜீ தமிழ் டிவியில் இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரையான இரண்டு மணி நேரத்தை விழிப்புணர்வுக்காக ஒதுக்கி இருக்கிறார்கள். சபாஷ் போட்டு பாராட்டலாம்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று (18-04-2019) காலை 8மணி முதல் 10 மணி வரை ஜீ தமிழில் எந்த ஒரு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகாது. ஏனென்றால் அதை விட ஒரு முக்கியமான வேலை ஒன்று உள்ளது வாக்களிப்பது என்று ஒரு ஸ்லைடுடன் அடிக்கடி 100 சதவிகிதம் வாக்குகள் பதிவாக வேண்டும் என்கிற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

    Zee Tamil rocks with Elections specials on Poll day

    ஜீ தமிழ் டிவியில் நடிக்கும் அத்தனை நடிகர்களிடமும் மைக்கை குடுத்து, என் வாக்கு என் உரிமை என்று பேச சொல்லி, வாக்களிக்கும் வயது வந்தவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும் என்று பேச வைத்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதுவும் ஒரு ஜனநாயக கடமை என்று கூட சொல்லலாம். அதை ஜீ தமிழ் தொலைகாட்சி செய்து வருவது பாராட்டுதலுக்கு உரியது. அதை விட எந்த பொழுது போக்கு டிவி சானலும் இதுபோல செய்ததில்லை என்ற வகையில் இது சின்னத்திரையில் ஒரு பெரும் புரட்சி என்றும் சொல்லலாம்.

    யாரும், யாருக்கும் இந்த கடமையை சொல்லித் தெரிந்துக்கொள்ள வேண்டிய நிலை இனி இல்லாமல் இருக்க வேண்டுமானால் நாட்டின் மன்னர்கள், குடிமக்கள்தான் என்பதை அறிந்து தாங்களே வாக்களிக்க முன்வரவேண்டும்.

    இந்த முறை 100 சதவிகித வாக்கு பதிவு என்பதை காது குளிர கேட்க வேண்டும் என்றால் மறக்காமல் ஒவ்வொருவரும் வாக்களியுங்கள். வெறும் சீரியலைப் போட்டுக் கொல்லாமல் இப்படி மக்களை ஊக்குவித்து அவர்களின் ஜனநாயகக் கடமையை நினைவூட்டும் ஜி தமிழ் டிவியை நிச்சயம் பாராட்டலாம்.

    English summary
    This is also a democratic duty. It is to be appreciated by the zee Tamil TV.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X