சினிமா விருது வழங்கும் விழாவை இப்படியும் கொண்டாட முடியுமா?
சென்னை: சினிமா விருது வழங்கும் விழாவை இப்படியும் கொண்டாட முடியுமா என்று வியக்க வைத்து வருகிறது ஜீ தமிழ் டிவி.
விருது வழங்கும் விழாவை விளம்பர படுத்துவதற்கே பல்வேறு விதத்தில் யோசித்து செயல்பட்டு இருக்கும் ஜீ தமிழ் டிவியை எப்படி பாராட்டினாலும் தகும்.
ஒவ்வொரு ப்ரோமோவையும் ஒவ்வொரு விதத்தில் ஷூட் செய்து ஒளிபரப்பி வருகிறது ஜீ தமிழ் டிவி.

இருக்கும் இந்த ப்ரோமோ
ஒவ்வொரு ப்ரோமோவும் ஒரு குறும்படம் போல இருக்கிறது. அண்மைய குறும்படமும் ஒரு குறும்படம் போல ரசிக்க வைத்துள்ளது. ஒரு இளைஞர் டிக்கெட் எடுத்துக் கொண்டு தியேட்டர் உள்ளே போகிறார். சினிமா வெறும் வார்த்தை இல்லைங்க.. அது ஒரு வாழ்க்கை என்று துவங்குகிறது.

ஒரே அறையில்
நம்ம எல்லாருமே நிறைய விஷயங்களை செய்யணும்னு ஆசைப்பட்டு இருப்போம். நம்மை எல்லாரையும் ஒரே அறையில் உட்கார வச்சு நம்ம செய்ய விரும்பின ஆசையை திரையில் நிறைவேத்துவதுதான் சினிமா என்று ஆர்மபிக்கிறார்கள். சினிமான்றது நம்ம வாழ்க்கையில் கலந்த ஒரு விஷயம்.

மிகப்பெரிய பங்கு
நம்ம வாழ்க்கையின் மிகப் பெரிய ஒரு பங்கு .. துயரத்தில் இருக்கும் போதும் சரி.. சந்தோஷத்தில் இருக்கும் போதும் சரி.. எதாவது ஒரு விதத்துல சினிமாவை நாம கொண்டாடிக்கிட்டுத்தான் இருக்கோம். வேலை கிடைச்சா அடிச்சான் பாரு அப்பாயிண்ட் மென்ட் ஆர்டரைன்னு சொல்றதா இருக்கட்டும்...

தல ஸ்டைல்
ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு போகும்போது தல ஸ்டைல்ல ஐம் பேக்னு சொல்றதா இருக்கட்டும்..கேர்ள் ஃபிரண்டுக்காக காத்து இருக்கும்போது தளபதி ஸ்டைல்ல ஐம் வெயிட்டிங்கனு சொல்றதா இருக்கட்டும்.. உலக நாயகன் கமல்ஹாசன் ஸ்டைலில் நடிக்க முயற்சி செய்யறதா இருக்கட்டும், சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் படிக்கட்டில் இறங்க முயற்சி செய்யறதா இருக்கட்டும் ..

ராஜா சார் பாட்டு
சோகத்தில் ராஜ சார் பாட்டு போட்டு மாடியில உட்கார்றதா இருக்கட்டும்...இப்படி எல்லா சூழ்நிலையிலும் சினிமா நம்ம கூடவே வாழ்ந்துகிட்டே இருக்கு.இப்படிப்பட்ட சினிமாவை நாம எப்படி எல்லாம் கொண்டாடி இருக்கோம். குடும்பத்தோட நாம எங்காவது வெளியில போனோம்னா முதலில் நாம தேடித் போவது சினிமா தியேட்டர்தான்.

காதல் மலர்வது
காதல் மலர்வது சினிமாவைப் பார்த்துதான்.. நடிகரை கொண்டாடுவது சினிமாவைப் பார்த்துதான்.. நாள் பூரா உழைத்து களைப்பை போக்குவது சினிமா பார்த்துதான்...இப்படி எத்தனையோ உதாரணம் காண்பித்து திரையின் திருவிழாவை பெருமைப்படுத்தி இருக்கிறது ஜீ தமிழ் டிவி
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications