ஒரு அவார்ட் குடுக்க வந்த எனக்கு மூன்று அவார்ட்.. பார்த்திபன் கலகல!
சென்னை: தொலைக்காட்சிகள் தங்கள் சானல்களைக் கொண்டாட மறப்பதில்லை. வருடா வருடம் தங்களது தொலைக்கட்சியின் குடும்ப விருதுகள் என்று அறிவித்து, கலைஞர்கள் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றன.
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி, கலர்ஸ் தமிழ் டிவி என்று எந்த சானல்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அந்த வகையில் ஜீ தமிழ் டிவியும் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவை கொண்டாடி இருக்கிறது.
அதன் ப்ரோமோ பார்க்கையில் வெகு பிரமாண்டமாகவே இந்த விழாவை ஜீ தமிழ் டிவி கொண்டாடி இருக்கிறது. சினிமா பிரபலங்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவ கார்த்க்திகேயன் என்று பலரும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

மாலை 6:30 மணிக்கு
இந்த விழா கொண்டாட்டத்தை வரும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஜீ தமிழ் டிவி ஒளிபரப்ப உள்ளது. இதில் ஜீ தமிழ் டிவியின் சீரியல் நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்ஸ் உள்ளிட்டவர்களுக்கு பிரபலங்கள் விருது வழங்குகிறார்கள்.

பெயர்கள் சீரியல்கள்
செம்பருத்தி, யாரடி நீ மோகினி, கண்டுக்கொண்டேன் கண்டுகொண்டேன், பிரியாத வரம் வேண்டும்,அஞ்சலி,மவுன ராகம் என்று பல சீரியல்கள் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜீ தமிழ் ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது செம்பருத்தி சீரியல்.

நட்சத்திரா சைத்ரா
யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்ரீயுடன் ஜோடி சேர்ந்து நடிப்பவர் நட்சத்திரா. இவர் மலையாள பெண். ஜீ தமிழ் டிவியின் வேறு சீரியலில் நடிக்கும் சைத்ராவுக்கு விருது வழங்க நடிகர் பார்த்திபனை அழைத்தார்கள். அவரும் ஜம்மென்று விருது வழங்க வந்திருந்தார். சைத்ரா பார்த்திபன் கையால் விருது வாங்க வந்திருந்தவர் நெகிழ்ந்து போய் நான் உங்கள் பரம ரசிகை சார் என்று மெய் சிலிர்த்தார்.

ரசிகை நட்சத்திரா
சார் என்னைப் போல உங்கள் ரசிகை ஒருத்தி. உங்களை வச்ச கண் வாங்காமல் பார்த்து சைட் அடிச்சுகிட்டு இருக்கான்னு சொன்னார் சைத்ரா. அவங்களுக்கு தெரிஞ்சு இருக்குன்னு பார்த்திபன் சொன்னார்.அதாவது என்னை சைட் அடிக்கணும்னு அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு என்பது போல.

பார்த்திபன் ஹக்
கூப்பிடட்டுமான்னு சைத்ரா கேட்க, கூப்பிடுங்க என்றதும் மேடைக்கு வந்த நட்சத்திரா பார்த்திபனிடம் ஹக் கேட்டு கட்டிக் கொண்டார். சைத்ரா சார் நானும் என்று கேட்டு கட்டிக் கொண்டார். அப்போது பேசிய பார்த்திபன் நான் ஒரு அவார்ட் கொடுக்க வந்தேன்.எனக்கு மூணு அவார்ட் கிடைச்சு இருக்குன்னு விளையாட்டாக எப்போதும் போல பேசி விழாவை கலகலக்க வைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications