Zee Tamil Tv : ஜீ தமிழ் டிவி 11ம் ஆண்டை இன்று நிறைவு செய்கிறதாம்!
சென்னை: ஆரம்ப காலத்தில் மத்திய அரசு தொலைக் காட்சியான தூர்தர்ஷன் கேந்திராவை மட்டுமே நம்பி இருந்தோம். அதுவும் கூட மாநிலங்களின் தலை நகரங்களில் மட்டுமே தெரியும்.
அதன் பிறகு சில வருடங்கள் கழித்து சில மாவட்ட தலை நகரங்களிலும் தெரிய ஆரம்பித்தது. ஊர்ப் புறங்களுக்கும் தூர்தர்ஷன் தெரிய ஆரம்பித்த காலக் கட்டத்தில்தான் அனைத்து ஊர்களிலும் சன் டிவி தனது சேவையைத் துவங்கியது.
டிஷ் ஆன்டெனா அமைப்பது, கேபிள் கனெக்ஷன் கொடுப்பது என்று பெரிய புராஸஸாகி அனைத்து மக்களும் தமிழ் நிகழ்ச்சிகளை கண்டு களிக்க ஆரம்பித்தனர்.

டிவியில் போட்டி
டிவிக்கு போட்டி வேண்டும் என்று ராஜ் டிவி, விஜய் டிவி என்று போட்டி டிவிக்கள் முளைக்கத் துவங்கின. கடந்த 11 வருடங்களுக்கு முன்னர் இப்படி ஆரம்பித்ததுதான் ஜீ தமிழ் டிவி.இது இந்தியா முழுவதும் பல மொழிகளில் முன்பே கோலோச்சி இருந்தாலும், பின்னர்தான் தமிழ்நாட்டில் தனது ஒளிபரப்பைத் துவங்கியது.

ஜீ தமிழ் டிவி
ஜீ தமிழ் டிவி ஆரம்பித்த வேகத்திலேயே சூடு பிடிக்கத் துவங்கி வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கி மக்களின் கவனத்தை ஈர்த்தது. சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சி பல தரப்பினரிடம் இருந்து பல்வேறு விமர்சனங்களை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், அந்த டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் முதன்மையானது என்றே பார்க்கப்படுகிறது.

போட்டி கொடுப்பது
சீரியல், கேம் ஷோ இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகள் என்று அத்தனை சானல்களுக்கும் டஃப் காம்படீஷன் கொடுத்து வருகிறது. நடனப் போட்டி, சரிகமப என்கிற போட்டிகள் இதற்கு விதிவிலக்கு அல்ல. பிரமாண்டம் என்பதும் இந்த டிவிக்கு கை வந்த கலை
|
இன்று நிறைவு
இந்த நிலையில்தான் ஜீ தமிழ் டிவி தனது 11 வது ஆண்டை இன்று நிறைவு செய்துள்ளது. நாளை மாலை 6:30 மணிக்கு ஜீ தமிழ் டிவி குடும்ப விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்ப உள்ளது. இத மிகப் பிரமாண்டமாக ஜீ தமிழ் டிவி நடத்தி முடித்து இருக்கிறது. நாளை ஜீ தமிழ் டிவி 12 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நாள் அவர்களுக்கு நல்ல நாளாகவே இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications