ஆன்லைன் புக்கிங்கில் 10 வயது.. அடையாள அட்டையில் 12 வயது.. பம்பையில் சிறுமி தடுத்து நிறுத்தம்
திருவனந்தபுரம்: ஆன்லைன் புக்கிங்கில் சிறுமிக்கு 10 வயது என குறிப்பிட்டு விட்டு அடையாள அட்டையில் 12 வயது என இருப்பதால் ஒரு சிறுமியை கேரள போலீஸார் பம்பையில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சுவாமியை தரிசனம் செய்வதில் ஆண், பெண் பேதம் இருக்கக் கூடாது. எனவே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

அரசியல் சாசனம்
இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளத்தில் உள்ள நாயர் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இதன் மீதான தீர்ப்பு கடந்த வாரம் வந்தது. அதில் இந்த மனுவை விசாரிக்குமாறு 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

பெண்கள் தடுத்து நிறத்தம்
அதுவரை சபரிமலைக்கு அனைத்து வயதினரும் அனுமதிக்கலாம் என்ற முந்தைய தீர்ப்பு தொடரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி ஐயப்பன் கோயில் நடைத் திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற ஆந்திர பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

12 வயது
மேலும் மாநில அரசு கூறுகையில் சபரிமலைக்கு சுயவிளம்பரத்துக்காக வரும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என கூறிவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பேலூர் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் சபரிமலைக்கு சென்றனர். இவர்கள் குழுவில் 12 வயது சிறுமியும் அவரது தந்தையும் இருந்தனர்.

இருமுடி
பம்பை வந்தவுடன் அவர்களை கேரள போலீஸார் சோதனை செய்தனர். அப்போது இருமுடி கட்டுவதற்கான ஆன்லைன் புக்கிங்கில் அந்த சிறுமிக்கு 10 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறுமியின் அடையாள அட்டையை சோதனை செய்ததில் அவருக்கு 12 வயது என தெரியவந்தது.

பரபரப்பு
பின்னர் அந்த சிறுமி போலீஸாரால் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து சிறுமியை விட்டுவிட்டு அவரது உறவினர்கள் மட்டும் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications