ரூ 20 கோடி இந்த நம்பருக்குத்தான்! கேரள கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் ரிசல்ட்! யார் அந்த அதிர்ஷ்டசாலி?
திருவனந்தபுரம்: கேரளாவில் முதல் பரிசு ரூபாய் 20 கோடி கொண்ட "கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி" விற்பனை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி அலுவலகத்தில் நடைபெற்றது. முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்ட எண் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து யார் அந்த அதிர்ஷ்டசாலி என கேரள மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. அங்கு தினமும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. அதுபோக வருடத்திற்கு ஆறு பம்பர் குலுக்கலும் நடைபெறுகிறது. ஓணம் பம்பர், ஆயுத பூஜா பம்பர், கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர்,மான்சூன் பம்பர்ம், என வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கலும் நடைபெறும்.

கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர்
இதில் முதல் பரிசாக பல கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஓணம் பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியில் வயநாட்டில் வாங்கப்பட்ட லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசு விழுந்தது. கர்நாடகாவை சேர்ந்த மெக்கானிக் அல்தாப் பாஷா என்பவருக்கு அடித்தது. பூஜா பம்பரில் முதல் பரிசாக ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டது.
இதில் முதல் பரிசு கொல்லம் கேஎஸ் ஆர் டிசி பஸ்டாண்ட் அருகே உள்ள கடையில் விற்கப்பட்ட லாட்டரி எண் 'JC 325526' என்பதற்கு விழுந்தது. கேரளாவை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு முதல் பரிசு அடித்தது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி விற்பனை தொடங்கியது. இந்த பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி அளிக்கப்படுகிறது.
ரூ 20 கோடி முதல் பரிசு
மொத்தம் 10 சீரிஸ்களில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இரண்டாவது பரிசாக 20 பேருக்கு தலா ஒரு கோடியும், மூன்றவது பரிசாக 30 வின்னர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் பரிசு அளிக்கப்படுகிறது. 4 வது பரிசாக 20 டிக்கெட்டுக்ளுக்கு ரூ.3 லட்சமும், 5 வது பரிசாக 20 பேருக்கு தலா ரூ.2 லட்சமும் அளிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விற்பனை தொடங்கிய நிலையில், மிகவும் விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்றது.
ரூ.20 கோடி வின்னர் யார்?
ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 400 ஆகும். இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி அலுவலகத்தில் நடைபெற்றது. முதல் பரிசான 20 கோடி ரூபாயை அடித்து தூக்கப்போகும் நபர் யார் என்பதை காண கேரளா லாட்டரி பிரியர்கள் ஆவலோடு காத்து இருந்த நிலையில் அதிர்ஷ்ட எண் வெளியிடப்படுள்ளது.. XD 387132 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் சக்கரக்கல் என்ற ஊரில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசாக 20 பேருக்கு தலா ரூ.1 கோடி கிடைக்கும். இரண்டாவது பரிசுக்கான லாட்டரி டிக்கெட் எண்கள் வருமாறு:
ரூ.1 கோடி வின்னர் யார்?
ΧΑ 571412, XB 325009, XC 124583, XC 173582, XC 515987, XD 367274, XD 370820, XD 566622, XD 578394, ΧΕ 481212, XE 508599, XG 209286, ΧΗ 301330, XH 340460, ΧΗ 589440, XK 289137, XK 524144, XL 386518
கண்ணூர் மாவட்டத்தில் உள்ள முத்து ஏஜென்சியில் விற்கப்பட்ட லாட்டரிக்கு முதல் பரிசு அடித்துள்ள நிலையில் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி யார்? என்ற ஆவல் கேரளாவில் லாட்டரி பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications