Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்கிங்... ஓடும் ரயிலில் பெண்ணுக்கு தீ வைப்பு.. குழந்தை உட்பட 3 பேர் கருகிய சோகம்.. கேரளாவில் பரபர

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்ததில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

Recommended Video

    Kerala-வில் ஓடும் Train-ல் நடந்த கோரம்...பக்கா ஸ்கெட்ச்! பயங்கரவாத சதியா?

    கேரளாவின் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்துக்கொண்டிருந்தது. சரியாக இரவு 9.45 மணியளவில் ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்து கோராபுழா ரயில்வே பாலத்தில் சென்றக்கொண்டிருக்கையில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் போன்ற திரவத்தை பெண் பயணி மீது ஊற்றியிருக்கிறார். பின்னர் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனால் அந்த பெட்டி முழுவதும் அலறல் சத்தம் கேட்டது.

    3 killed in Kerala train fire incident involving woman

    சக பயணிகள் உஷாராவதற்குள் தீ மளமளவென பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து அபாய சங்கிலி இழுக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் ரயிலில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தீப்பற்றி எரிந்த பெண்மணியை மட்டும் காணவில்லை. இதனையடுத்து ரயில்வே போலீசார் தண்டவாளங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.

    அதாவது ரயில் தண்டவாளத்தில் அப்பெண்ணுடன் சேர்த்து மேலும் 2 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதாவது ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆணின் சடலம் என மொத்தம் 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மூன்று பேர் மீதும் பலத்த தீ காயங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து மூன்று பேரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், "முதலில் பெண் மீது மர்ம நபர் தீ வைத்திருக்கிறார். அப்பெண் தன்னுடன் குழந்தை ஒன்றையும் வைத்திருந்திருக்கிறார். எனவே தீ அவர் மீதும் பரவியிருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க அவர்கள் இருவரும் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்துள்ளனர்.

    அதேபோல, இவர்களுக்கு பக்கத்தில் இருந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க ஆண் மீதும் தீ பரவியதால் அவரும் ரயிலிலிருந்து கீழே குதித்திருக்கிறார். எனவே மூவரும் பலத்த அடிப்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைக்கு, அப்பெண் அத்தை என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறதா? என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். மர்ம நபர் குறித்து ரயில் நிலையங்களிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளி பிடிபடுவார்" என்று காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 9 பேர் தற்போது கோழிக்கோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓடும் ரயிலில் பெண்ணுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+