"தகதக".. கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்.. தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகள்! பதைபதைத்த மக்கள் - ஏன்?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் திடீரென நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தின் 3 வது நடைமேடையில் ஆலப்புழா - கண்ணூர் இடையிலான எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு 1:25 மணியளவில் இந்த ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இந்த பயங்கர தீ விபத்தில் ரயிலின் 3 பெட்டிகள் எரிந்து நாசமாகின. ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவிய பின்புறம் இருந்த 3 பெட்டிகள் தீ பற்றி எரிந்தன. இதனை கண்ட பொதுமக்களும் ரயில்வே ஊழியர்கள் பதற்றமடைந்து தீயணைப்பு துறையினருக்கும் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 3 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு படையினர் மணிக்கணக்கில் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில் 3 ரயில் பெட்டிகளும் முற்றிலுமாக தீயில் கருகின. இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் மற்றும் கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தீ வைப்பு சம்பவமாக இருக்கக்கூடும் என்று ரயில்வே அதிகாரிகள் சந்தேகித்து உள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், "யாரோ ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். 3 தீயணைப்பு குழுக்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்கள். பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது.

இருப்பினும் 3 ரயில் பெட்டிகளும் முழுவதுமாக தீயில் கருகி நாசமாகின. இந்த தீ விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்புகளும் பதிவாகவில்லை." என்றார். கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி கோழிக்கோடு மாவட்டம் ஏலத்தூரில் இதே ரயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயிலில் பயணிக்கும்போது தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
எரிபொருள் ஊற்றி 3 பேர் எரிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 9 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியை சேர்ந்த ஷாருக் சைபி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், இந்த ரயில் தீ விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications