கோழிக்கோடு விமான விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 7 வயது இரட்டையர்கள்!
திருவனந்தபுரம்: துபாயிலிருந்து தனது தாயுடன் கோழிக்கோடு புறப்பட்ட 7 வயது இரட்டையர்கள் விமான விபத்திலிருந்து உயிருடன் மீண்டுள்ளனர். இருவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்கள்.
கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ரன்வேயில் இறங்கிய போது சறுக்கி விழுந்து இரண்டாக பிளந்தது. இந்த விபத்தில் விமானி, இணை விமானி உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமானத்தில் தாயுடன் பயணம் செய்த 7 வயது இரட்டையர்கள் சிறிய காயத்துடன் உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய்ன், ஜெமில் குண்டோட் பாரக்கல். இவர்களது தாய் உயிர் பிழைத்துள்ளாரா என தெரியவில்லை.
தனது தாயின் பெயரை இரு குழந்தைகளும் கூறியுள்ளனர். அதை வைத்து அவரை தேடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இருவருக்கும் காலில் லேசான காயங்கள் உள்ளன. அவர்களுடைய குடும்பத்தினர் யாரும் இல்லை. இதனால் உறவினர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து அவர்களை அழைத்து சென்றுள்ளார். இந்த விமானத்தில் இந்த சிறுவர்கள் உள்பட 50 சிறுவர்கள் பயணம் செய்துள்ளனர்.
இவர்களது தந்தை துபாயில் இருக்கிறார். அவரை பார்க்க தனது தாயுடன் இருவரும் துபாய் சென்றதும் அங்கு கொரோனா லாக்டவுனால் தாயகம் திரும்ப முடியாததும் வந்தே பாரத் மூலம் மீட்கப்பட்டதும் தெரியவந்தது. அவர்களது குடும்பத்தை சேர்ந்த வேறு யாரேனும் பயணம் செய்தனரா என தெரியவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications