ஐஸ்கிரீமுக்கு ஆசைப்பட்ட 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி.. அத்தை அரங்கேற்றிய கொடூரம்! கேரளாவில் ஷாக்
திருவனந்தபுரம்: அண்ணன் குடும்பத்தை காலி செய்ய சொந்த தங்கையே ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு கொயிலாண்டி பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவருக்கு ஒரு தங்கை உண்டு இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கைக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து தானும் திருமணம் செய்துள்ளார். தற்போது இவருக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவருக்கும் இவரது தங்கைக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. காரணம் பூர்வீக சொத்துதான்.

முகமது அலியின் பெற்றோர் விட்டு சென்ற சொத்தை பிரிப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்படவே தங்கை தனது கணவர் வீட்டிலிருந்து வந்து முகமது அலி வசிக்கும் வீட்டின் பக்கத்து வீட்டில் குடியேறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் தனது குடும்பத்துடன் இதே இடத்தில் வசித்து வந்திருக்கிறார். இப்படி இருக்கையில், அண்ணன் முகமது அலிக்கும் அவரது தங்கைக்கும் இடையே அடிக்கடி சண்டை உருவாகியுள்ளது. அக்கம் பக்கத்தினர் இதில் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்து வந்துள்ளனர்.
இப்படியாக சண்டை சர்ச்சரவுகளோடு சென்றுக்கொண்டிக்கையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் முகமது அலியின் 12 வயது மகன் திடீரென மயக்கம்போட்டு விழுந்திருக்கிறார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுவன் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல அதிர்ச்சி தகல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சிறுவன் கடைசியாக ஐஸ்கிரீமை சாப்பிட்டிருக்கிறார். இதனையடுத்துதான் அவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த ஐஸ்கிரீம் யார் கொடுத்தது என்கிற கேள்வியெழுந்துள்ளது. ஆனால் வீட்டில் இருப்பவர்கள் யாரும் ஐஸ்கிரீம் வாங்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டில் வசிக்கும் முகமது அலியின் சகோதரி தாஹிராதான் ஐஸ்கிரீமை வாங்கி கொடுத்திருக்கிறார். இதனையடுத்து தாஹிராவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருந்தார். இதனையடுத்து அவரை கைது செய்து தீவிரமாக விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
அதாவது சொத்து பிரச்னையில் அண்ணன் குடும்பத்தை மொத்தமாக காலி செய்யவே ஐஸ்கிரீமில் எலி மருந்து கலந்து கொடுத்ததாகவும், இந்த ஐஸ்கிரீமை அனைவரும் சாப்பிட்டுவிட்டு உயிரிழந்துவிடுவார்கள் என நினைத்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து தாஹிரா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். எனவே அவரை உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்படலாம் என காவலர்கள் கூறியுள்ளனர்.
சொத்துக்காக சொந்த அண்ணன் மகனை தங்கை கொலை செய்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக எலி மருந்து அல்லது எலி பேஸ்ட் சாப்பிடுவதால் அதில் உள்ள மஞ்சள் பாஸ்பரஸ் தோல், குடல் மற்றும் மூச்சுக்குழல் ஆகியவற்றில் இருக்கும் திசுக்களால் உறிஞ்சப்படுகிறது. இதனையடுத்து ரத்தத்தில் விஷம் கலந்துவிடுகிறது. இதனை எளிதாக சரிபடுத்த முடியாது. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் பிழைப்பது அரிதாகிவிடும். இதற்கு ஒரே சிகிச்சை பிளாஸ்மா மாற்று அறுவை சிசிக்சைதான்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications