சைஸ் தப்பா இருக்கு.. கேரள அமைச்சருக்கு ஆபத்தாக முடிந்த 32 வருட பழைய "அண்டர்வேர்".. பதவிக்கே சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜுவிற்கு 32 வருட பழைய அண்டர்வேர் ஒன்று பிரச்சனையாகி உள்ளது. சைஸ் மாறிப்போன அண்டர்வேர் ஒன்று அவரின் பதவிக்கே சிக்கலை உண்டாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா அமைச்சர் ஆண்டனி ராஜி ஜனாதிபதியா கேரளா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இந்த கட்சி அங்கு ஆளும் சிபிஎம் கட்சியின் எல்டிஎப் கூட்டணியில் உள்ளது. இவர் திருவனந்தபுரம் எம்எல்ஏ ஆவார்.

வழக்கறிஞரான இவர் 32 வருடங்களுக்கு முன் ஆஜரான கேஸ் ஒன்றுதான் அவருக்கு இப்போது சிக்கலாகி உள்ளது.

ஆண்ட்ரு சல்வடோர்

ஆண்ட்ரு சல்வடோர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆண்ட்ரு சல்வடோர் செர்வெல்லி. இவர் கடந்த 1990ம் ஆண்டு hashish எனப்படும் ஒருவகை கஞ்சாவை இவர் கேரளாவிற்கு கடத்தி வந்ததாக புகார். திருவனந்தபுரத்திற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து இவர் கஞ்சா கடத்தியதாக புகார். இவர் தனது அண்டர்வேரில் கஞ்சாவை வைத்து இருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து அந்த ஆஸ்திரேலியார் மூத்த வழக்கறிஞர் செலின் என்பவரிடம் தனக்காக வாதிடும்படி கூறினார். இப்போது அமைச்சராக இருக்கும் ஆண்டனி ராஜு அப்போது செலினிடம் ஜுனியராக பணிபுரிந்து வந்தார்.

சிறிய கேஸ்

சிறிய கேஸ்

சிறிய கேஸ் என்பதால்தான் ஆண்டனியை ஆஜராகி வாதிடும்படி மூத்த வழக்கறிஞர் செலின் கூறி இருக்கிறார். ஆண்டனியும் வழக்கில் ஆஜராகி வாதிட்டார். அப்போது ஆண்டனி வைத்த வாதம்.. கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளாடை அளவு என்பது குற்றஞ்சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய நபரின் உள்ளாடை அளவை விட சிறியது. இதனால் அவர் இதை அணிந்து வந்திருக்க முடியாது என்று கூறினார். இதை வைத்து அந்த ஆஸ்திரேலியர் விடுதலையும் செய்யப்பட்டார்.

விடுதலை

விடுதலை

இதையடுத்து போலீஸ் சார்பாக உயர் நீதிமன்றத்தில் இதில் மேல்முறையீடு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஜெயமோகன் என்ற போலீஸ் அதிகாரி சார்பாக இதில் வைக்கப்பட்ட வாதத்தில், ஆதாரங்களில் சிலர் மாற்றங்களை செய்துள்ளதாக கூறினார். அதாவது அந்த அண்டர்வேரில் சில மாற்றங்களை செய்துள்ளதாக அவர் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு 1994ல் பதிவு செய்யப்பட்டது.

மீண்டும் வழக்கு

மீண்டும் வழக்கு

இந்த நிலையில் 2006 வரை இந்த வழக்கு பெரிதாக விசாரிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 2006ல் இந்த வழக்கில் முக்கியமான குற்றப்பத்திரிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதில் என்ன விவரம் இருந்தது என்று வெளியிடப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது அதன் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அப்போது வழக்கறிஞராக இருந்த அமைச்சர் ஆண்டனி ராஜு, ஆஸ்திரேலியரின் உள்ளாடையை வாங்கி சென்று அதை போலவே நீல நிறத்தில் சின்ன உள்ளாடை ஒன்றை வாங்கி, அதை மாற்றி வைத்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மாற்றினார்

மாற்றினார்

கோர்ட்டில் ஆதாரத்தில் இருந்த உள்ளாடையை ஆண்டனி ராஜி லஞ்சம் கொடுத்த கிளர்க்கிடம் இருந்து வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் உள்ளது. அதாவது ஜட்டியை வாங்கிகொண்டு போய் அதை விட சின்ன ஜட்டியை ஆதாரத்தில் வைத்து மாற்றி குற்றவாளியை தப்பிக்க வைத்துள்ளதாக புகார். கேட்பதற்கு சாதாரண ஜட்டி வழக்கு போல இருந்தாலும் கோர்டை ஏமாற்றியது பெரிய contempt குற்றம்.

பெரிய குற்றம்

பெரிய குற்றம்

அதேபோல் இதை செய்தவர் இப்போது அமைச்சராக இருப்பது அதைவிட பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கோர்டில் அப்போது கிளர்க்காக இருந்த ஜோஸ் மீதும் இந்த வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆஸ்திரேலியார் ஆண்ட்ரு மீது ஆஸ்திரேலியாவில் வேறு ஒரு கொலை வழக்கும் உள்ளது. இந்த கொலை வழக்கு மற்றும் பல போதை பொருள் வழக்கு தொடர்பாக ஆஸ்திரேலிய போலீஸ் ஆண்ட்ரு சல்வடோர் செர்வெல்லியிடம் விசாரணை நடத்தியது.

லஞ்சம் விடுதலை

லஞ்சம் விடுதலை

அப்போதுதான் இவர் இந்தியாவில் கோர்டில் லஞ்சம் கொடுத்து விடுதலை ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தான் ஆஸ்திரேலிய போலீஸ் இந்திய வெளியுறவுத்துறை வழியாக கேரள போலீசிடம் தெரிவித்து உள்ளது. இதை தெரிந்து கொண்ட பின்புதான் கேரள போலீஸ் அமைச்சர் ஆண்டனி ராஜுவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் தற்போது விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+