இது என்ன டிராகன் மாதிரி?.. ராட்சச பிராணியை கையில் தூக்கி சென்ற இளைஞர்.. கேரளாவில் சுவாரசிய சம்பவம்!
கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் ராட்சச சைஸ் ஓணான் ஒன்றை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் ராட்சச சைஸ் ஓணான் ஒன்றை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.
இகுவானா (iguana) என்ற பிராணி ஒரு வகை ஓணான் ஆகும். இது ஓணான் வகைகளிலேயே மிகவும் பெரிய பிராணி ஆகும். பார்க்க ராட்சச கொடூர டிராகன் போல இருக்கும்.
ஆனால் மீசை வைத்த பச்சை குழந்தை போல இது மிகவும் சாந்தமான பிராணி ஆகும். ஓணான் வகைகளில் இது மிகவும் சாந்தமான பிராணி ஆகும்.

மிகவும் அதிக பாசம்
இந்த இகுவானா (iguana) ஓணான் மிகவும் பாசமாக இருக்கும். நாய்களை போல மிகவும் பாசமாக இருக்கும். அதிக நுகர்வு சக்தி கொண்ட பிராணி ஆகும் இது. இதற்கு குட்டி டிராகன் என்ற பெயர் கூட இருக்கிறது. அதிலும் இது நுகர்வு சக்தி மூலமே தங்கள் ஓனர்களை மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும். இதை வளர்ப்பதும் மிகவும் எளிது.

என்ன நடந்தது
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் இகுவானா ஒன்றை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. இவர் பெயர் ஜிதின். இவர் எர்ணாகுளத்தை சேர்ந்தவர். இவர் ஆண் இகுவானா பிராணி ஒன்றை கடந்த 5 வருடமாக வளர்த்து வருகிறார். இதனால் அந்த பகுதியில் இவர் கொஞ்சம் பிரபலம்.

மிக பிரபலம்
இந்த நிலையில் அந்த இகுவானாவிற்கு தொண்டையில் பெரிய அளவில் சதை வளர்ந்து இருக்கிறது. இதனால் இகுவானா பல நாட்களாக மூச்சு விட சிரமப்பட்டு கஷ்டப்பட்டு உள்ளது. இதையடுத்து இகுவானாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய கால்நடை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதனால் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனைக்கு இகுவானாவை ஜிகித் எடுத்து சென்றுள்ளார்.

நடந்தார்
கார் இல்லை, பைக்கும் இல்லை, லாக்டவுன் காரணமாக எப்படி கால்நடை மருத்துவமனை செல்வது என்று தெரியாமல் குழம்பிய ஜிதின், இகுவானாவை கையில் தூக்கிக் கொண்டே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவர் மருத்துவமனைக்கு சென்ற வீடியோ இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது. இகுவானாவை தூக்கிக் கொண்டு இவர் மருத்துவமனைக்கு சென்ற போதே அவரை பலர் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

என்ன டிராகன்
இது என்ன குட்டி டிராகன் போல இவர் தூக்கிக் கொண்டு செல்கிறார் என்று பலர் அவரை பின் தொடர்ந்து ஆச்சர்யமாக பார்த்து உள்ளனர். இதையடுத்து இகுவானாவிற்கு அதன் தொண்டையில் இருந்த சதை நீக்கப்பட்டது . தற்போது அந்த இகுவானா ஆரோக்கியமாக இருக்கிறது. இது மிகவும் விலை அதிகமானது ஆகும். பல லட்சம் தொடங்கி கோடி ரூபாய்க்கு கூட இகுவானா விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications