தலைக்கு தில்லு பார்த்தீங்களா.. கேரள போலீசிடமே பணம் கேட்டு, வசமாக சிக்கிய விழுப்புரம் திருடன்!
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள துணிக் கடையில் கொள்ளையடித்துவிட்டு செல்லும் வழியில் ஒரு திருடன், போலீசிடமே ஊருக்கு செல்ல பணம் கேட்டு அப்பட்டமாக சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 3.30 மணியளவில் அவர்கள் கண்ணில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு நபர் சிக்கியுள்ளார். உடனடியாக அவரை பின்தொடர்ந்து சென்று பேசியுள்ளனர். தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்கிற அந்த நபர் இடுக்கி மாவட்டம், தொடுப்புழாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்ததாகவும், வேலை பிடிக்கவில்லை என்பதால் மீண்டும் தமிழ்நாடு செல்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும், ஊருக்கு செல்ல பேருந்துக் கட்டணத்துக்கு பணம் வேண்டும் என போலீசிடம் கேட்டுள்ளார். போலீசார் அவரை மேலும், கீழும் நோட்டமிட்டபோது சட்டைப் பையில் பணம் கட்டு கட்டாக இருந்தது அப்பட்டமாக தெரிந்துள்ளது. சட்டைப் பையிலேயே ரூ.6,000 வைத்திருந்ததால், சந்தேகப்பட்டு அவரை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அண்டர்வியரில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
அதற்கு ராதாகிருஷ்ணன், "சார்.. இது ஹோட்டல் வேலையில் நான் சம்பாதித்து சேமித்து வைத்தத் தொகை." என்றதும் போலீசாருக்கு குபீர் சிரிப்பு வந்துவிட்டது. "அப்படியா.. சரி நீ எந்தக் கடையில் வேலை பார்க்கிறாய் சொல்." என்று கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர். ராதாகிருஷ்ணன் ஊருக்கு புதியவர் என்பதால்,பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளார். ஒருகட்டத்தில் அவர், "ஆமா சார் ஒரு துணிக்கடையில் இருந்துதான் இந்தப் பணத்தை கொள்ளையடித்தேன்." என ஒப்புக் கொண்டார்.
ஆனாலும் கொள்ளையடித்த கடையின் பெயர் கூட ராதாகிருஷ்ணனுக்கு தெரியவில்லை. பிறகு போலீஸ் விசாரணையில் தொடுப்புழாவில் உள்ள ஒரு துணிக்கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 2.30 மணியளவில் ராதாகிருஷ்ணன் மரக்கட்டை மூலம் கடையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சென்று கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications