ஜெயிலில் இருந்து தப்பிய கைதி.. நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கே போனாரு! உடனே நடந்த "ஆதார் கார்டு" ட்விஸ்ட்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியில் நடந்துள்ள ஒரு அசாதாரண சம்பவம் காவல்துறையினரையே உலுக்கி விட்டுள்ளது.. இப்படியொரு விநோதம் நடக்குமா? அதுவும் போலீஸ் ஸ்டேஷனிலேயே நடந்த இந்த சம்பவத்தான் இணையத்திலும் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
அசாம் மாநிலம் திமாஜி பகுதியை சேர்ந்தவர் மதுர்ஜ்யா சோனாவால்.. இவருக்கு 28 வயதாகிறது. இவரது தொழிலே திருட்டுத் தொழில்தான்.. அடிக்கடி கைதாகி ஜெயிலுக்கு செல்பவர்.

ஜெயில் கைது
அந்தவகையில், எடத்தலா பகுதியில் பிளைவுட் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களின் செல்போன்களை சோனாவால் திருடிவிட்டாராம்.. இறுதியில் வசமாக பிடிபட்டு போலீசிலும் ஒப்படைக்கப்பட்டார்.. அதனைத் தொடர்ந்து எர்ணாகுளம் ஆலவா துணைச் சிறையில் நீதிமன்றக் காவலில் சோனாவால் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு ஜெயிலுள்ள கைதிகளுக்கான ஓய்வு நேரமாகும்.. இந்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி கொண்ட சோனோவால், ஜெயிலின் கிச்சன் பகுதிக்கு வந்தார்.. அங்கிருந்த வழியாக சென்று அங்கிருந்த உயரமான சுற்றுச்சுவரில் ஏறி தப்பி விட்டார்.
ஜெயில் சமையலறையில் ட்விஸ்ட்
ஓய்வு நேரம் முடிந்து மீண்டும் கைதிகளை அறைகளுக்குள் அடைக்கும் முன்பு வழக்கமான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.. அப்போதுதான் சோனாவால் மாயமானது சிறை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது.. உடனடியாக மற்ற பகுதிகளில் கைதி தப்பியோடியதை அலர்ட் செய்தார்கள்.. அருகிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்.. இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், போலீசாரே யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் நடந்தது.. ஜெயிலில் இருந்து அவ்வளவு கஷ்டப்ட்டு தப்பி ஓடிய சோனாவால், நேராக மறுபடியும் பெரும்பாவூர் போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்றுள்ளார்... தன்னை ஏற்கனவே கைது செய்த போலீசார் அங்கு இருக்க மாட்டார்கள் என்றும், தன்னை யாரும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது என்று கணக்கு போட்டுள்ளார்..
சிக்னல் தந்த சக போலீஸ்காரர்
போலீஸ் ஸ்டேஷன் உள்ளே சோனாவால் சென்றபோது, அங்கே வரவேற்பறையில் போலீஸ் உட்கார்ந்திருந்தார்.. ஆனால், சோனாவை அவருக்கு உடனடியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நேராக ஸ்டேஷனுக்குள் சென்ற சோனாவால், கைது செய்யும்போது தன்னிடமிருந்து வாங்கிக்கொண்ட ஆதார் அட்டையை திருப்பி தருமாறு கேட்டார்..
அப்போதுதான், மற்றொரு போலீசார் சோனாவாலை கவனித்தார்.. ஜெயிலிலிருந்து இந்த கைதி தப்பியதை ஏற்கனவே அறிந்திருந்த அந்த போலீசார், சோனாவாலை அடையாளம் கண்டு கொண்டார்.. உடனே சக காவலருக்கு சிக்னல் தந்தார்.. ஆனால் இதை கவனித்துவிட்ட சோனோவால், மறுபடியும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
மீண்டும் வலைவீச்சு
போலீஸார் சுற்றியிருந்த போதிலும், யாராலும் சோனாவாலை விரட்டி பிடிக்க முடியவில்லை. இதனால் தப்பியோடிய கைதியைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து காவல் நிலையங்களுக்கும் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் (RPF) அதிரடி எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
கைதி தனது சொந்த மாநிலமான அசாமுக்குத் தப்பியோடக்கூடும் என்பதால் அங்குள்ள காவல்துறையினருக்கும் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.. ஜெயிலில் இருந்தும், பிறகு போலீஸ் ஸ்டேஷனிலிருந்தும் கைதி தப்பியிருக்கும் சம்பவம், கேரளாவில் பேசுபொருளாகியுள்ளது... அத்துடன் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பி வருகிறது...!!


Click it and Unblock the Notifications
