கேரளாவில் இமாலய வெற்றியை நோக்கி இடதுசாரிகள்.. படு பாதாளத்தில் காங்கிரஸ்... ஆஜ் தக்- ஆக்ஸிஸ் சர்வே
திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 140 இடங்களில் இடதுசாரிகள் 120 இடங்கள் வரை வெல்லும் என ஆஜ் தக்-ஆக்ஸிஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் அடுத்த மாதம் சட்டபேரவை நிறைவடைகிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இடதுசாரிகளுக்கு இமாலய வெற்றி
அதில் ஆஜ் தக்-ஆக்ஸிஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், கேரளாவில் இடதுசாரிகள் மாபெரும் ஒரு வெற்றியைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 140 இடங்களைக் கொண்டுள்ள கேரளா சட்டசபையில் இடதுசாரிகள் 104-120 இடங்களில் வென்று அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016இல் இடதுசாரிகள் 91 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அதைவிடக் கூடுதல் இடங்களில் இம்முறை வெல்லும் என ஆஜ் தக்-ஆக்சிஸின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் படுதோல்வி
காங்கிரஸ் கூட்டணி 20-36 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் ஆஜ் தக்-ஆக்ஸிஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 47 இடங்களில் வென்றிருந்தது. இப்போது அதைவிடப் பாதிக்கும் குறைவான இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெல்லும் என ஆஜ் தக்-ஆக்ஸிஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒற்றை இலக்கில் பாஜக
அதேபோல கேரளாவில் இம்முறை எப்படியாவது இரட்டை இலக்கில் இடங்களில் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய பாஜக இந்த முறை வெறும் 0-2 வரையிலான இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுவரை வெளியான அனைத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக கேரளாவில் ஒற்றை இலக்கிலேயே இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் சாதனை
கேரளாவில் இடதுசாரிகள் வெல்வார்கள் என்றே தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆஜ் தக்-ஆக்சிஸின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு இடதுசாரிகள் இமாலய வெற்றியைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications