2.5 லட்ச ரூபாய்,ஸ்மார்ட்போன், ஓயின் பார்லர்.. எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கே லஞ்சம்கொடுத்த பாஜக
திருவனந்தபுரம்: பகுஜன் சமாஜ் வேட்பாளருக்கு 2.5 லட்ச ரூபாய் பணம், ஸ்மார்ட்போன் லஞ்சமாகக் கொடுத்து, வேட்பு மனுவை வாபஸ் வாங்க வைத்த குற்றச்சாட்டில் கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்குக் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் பாஜக மூன்றாவதாக ஒரு அணியை உருவாக்கிக் களமிறங்கியது.
இந்த முறை ஒரு கணிசமான எண்ணிக்கையில் தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருந்தது. இருப்பினும், பாஜகவால் கேரளாவில் ஒரு இடத்தைக்கூடக் கைப்பற்ற முடியவில்லை.

கேரள பாஜக
தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே கேரளாவின் பாஜக தலைமை மீது பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அதில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி திருச்சூர் நெடுஞ்சாலையில் ரூ 3.5 கோடி ஹவாலா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பாஜக தலைவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகக் கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரனின் மகனிடம் கேரள போலீசார் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

கேரள பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில் மற்றொரு தலைவலியாகத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளருக்கு லஞ்சம் கொடுத்து, வேட்பு மனுவை வாபஸ்பெற வைத்ததாகக் கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது 171 (B) மற்றும் 171 (E) ஆகிய பிரிவுகளின் கீழ் வழ்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் விவி ரமேஷ்சன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

Array
கடந்த வாரம் சனிக்கிழமை, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த கே.சுந்தர என்பவர் போலீசாரிம் வாக்குமூலம் ஒன்றை அளித்தார். மஞ்சேஸ்வரத்தில் போட்டியிட்ட தனது வேட்புமனுவை வாபஸ்பெற பாஜக தலைவர்கள் தனக்கு ரூ 2.5 லட்சம் மற்றும் ஸ்மார்ட்போன் ஒன்றை லஞ்சமாக கொடுத்தாக குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், வேட்புமனுவை வாபஸ் பெற 10 லட்ச ரூபாய் வேண்டும் எனத் தான் கோரியதாகவும் சுந்தர தெரிவித்தார்.

மிரட்டி வாபஸ்
இப்போது அவருக்கு ஒயின் பார்லர் மற்றும் கர்நாடகாவில் ஒரு புதிய வீட்டைத் தருவதாக பாஜகவின் வாக்குறுதி அளித்துள்ளனர். இருப்பினும், அதற்கு ஒப்புக்கொள்ளாததால் தன்னை உள்ளூர் பாஜக தலைவர்கள் கடத்தி, கட்டாயப்படுத்தி வேட்புமனுவை வாபஸ் பெற வைத்ததாகச் சுந்தர தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இவரது வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹவலா பணம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு?
கடந்த மார்ச் 21ஆம் தேதி சுந்தர தனது வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தார். அன்றைய தினம் முன்னாள் யுவ மோர்ச்சா மாநிலப் பொருளாளர் சுனில் நாயக் தனது வீட்டிற்கு வந்ததாகவும் செய்ததாகச் சுந்தரா தெரிவித்துள்ளார். திருச்சூர் நெடுஞ்சாலையில் ஹவாலா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திற்கும் இவருக்கும் தொடர்பு உள்ளது. இந்த சுனில் நாயக் கொடுத்த 25 லட்ச ரூபாய் தான் கொள்ளை அடிக்கப்பட்டதாக போலீஸில் முதலில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னரே அது ரூ 25 லட்சம் இல்லை, ரூ 3.5 கோடி என்பதை போலீசார் கண்டறிந்தனர்.












Click it and Unblock the Notifications