பாலியல் புகார்! நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் கைதாகி சில நிமிடங்களில் விடுதலையால் பரபரப்பு
திருவனந்தபுரம்: பாலியல் புகாரில் நடிகரும் மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கெனவே கீழமை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்ததால் அவர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டி, தனது அறிக்கையை கடந்த மாதம் தாக்கல் செய்திருந்தது. இந்த கமிட்டின் அறிக்கையைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசியும் புகார் கூறியும் வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் முகேஷ் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்கார வழக்கை வடக்கன்சேரி காவல் நிலையத்திலும் மரடு காவல் நிலையத்திலும் இரு வேறு வழக்குகளை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் முகேஷ் கீழமை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.
முகேஷ், மார்க்சிஸ்ட் கட்சியின் எம்எல்ஏவுமாகவும் இருக்கிறார். அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும் சொந்த கட்சியினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவர் பாலியல் புகார் வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு இன்று சென்றிருந்தார்.
அங்கு அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் திடீரென கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை கேரள உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தான் ஏற்கெனவே பெற்ற முன்ஜாமீனை காண்பித்தார். இதை ஏற்ற நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications