கேரள நடிகர் விஜய் பாபுவிடம் 9 மணி நேரம் விசாரணை.. நடிகையின் சம்மதத்துடன் உடலுறவு என வாக்குமூலம்
திருவனந்தபுரம்: என் மீது பாலியல் புகார் கூறிய நடிகையின் சம்மதத்தின் பேரிலேயே இருவரும் உறவு கொண்டோம் என கொச்சி காவல் நிலையத்தில் நடிகர் விஜய் பாபு பரபரப்பு வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் விஜய் பாபு, இவர் தன்னிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் விஜய் பாபுவின் தயாரிப்பில் வெளியான படம் ஒன்றில் நடித்த நடிகையை தனது வீட்டிற்கு வரவழைத்த விஜய் பாபு, மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

பாலியல் வன்கொடுமை
தன்னை மீண்டும் மீண்டும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிப்பதாகவும் அந்த நடிகை புகார் அளித்திருந்தார். மேலும் விஜய் பாபு மீது மற்றொரு நடிகையும் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் அந்த நடிகையிடம் பார்த்த மாத்திரத்திலேயே ஒரே ஒரு முத்தம் கொடுக்குமாறு கெஞ்சினாராம். அதற்கு அந்த நடிகை இப்படியோ சமாளித்து பின்னோக்கி நகர்ந்துவிட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.

விஜய் பாபு எங்கே
இந்த நிலையில் விஜய் பாபு துபாய்க்கு தப்பி சென்றார். அவர் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என கொச்சி போலீஸார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் 39 நாட்களுக்கு பிறகு துபாயிலிருந்து கொச்சி வந்தார் விஜய் பாபு. அவர் கொச்சி தெற்கு காவல் நிலையத்தில் ஆஜரானார்.

நடிகை குற்றச்சாட்டுக்கு மறுப்பு
அப்போது அவர் கேரள நடிகையின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் நடிகையின் சம்மதத்தின் பேரில்தான் நாங்கள் இருவரும் பாலியல் உறவு கொண்டோம். நான் சினிமா வாய்ப்பு தராததால் அவர் என் மீது இது போன்ற பொய்யான புகாரை கொடுத்துள்ளார் என விஜய் பாபு தெரிவித்தார்.

9 மணி நேரம் விசாரணை
நேற்று வந்த விஜய்பாபுவிடம் கொச்சி போலீஸார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இதனால் மல்லுவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. இன்னொரு நடிகை அளித்த புகாரின் பேரில் அடுத்த கட்டமாக விஜய்பாபுவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications