எந்த சாரே.. முரட்டு குடிகாரரா இருப்பார் போலயே ‘ஜெயிலர்’ வில்லன்.. பப்ளிக்ல இப்படியா? ஷாக் வீடியோ!
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் விநாயகன், கொல்லத்தில் உள்ள ஹோட்டலில் மது போதையில் ஆபாசமாக பேசி பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு திரைப்பட படப்பிடிப்புக்காக அங்கு தங்கியிருந்த போது, செக் அவுட் செய்யும் நேரத்தில் பிரச்சனை ஏற்படுத்தியதாகவும், கைது செய்ய வந்த போலீசாரையும் அவர் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. ஏற்கனவே பலமுறை விநாயகன் இதேபோல் சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரை உலகிலும் பிரபல நடிகராக அறியப்பட்டவர் விநாயகன். தமிழில் சிலம்பாட்டம், மரியான், காளை, திமிரு உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
குறிப்பாக திமிரு படத்தில் அவரது நடிப்பு பலரையும் கவனிக்க வைத்தது. அது மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பெயர் சொல்ல வைக்கும் பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக 2016ல் அவர் நடித்த கம்மாண்டி படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

கங்கா எனும் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்று தந்தது. அடிப்படையில் நடன கலைஞரான அவர் தீ நடனத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆடு, ஒருத்தி, ஆடு 2, காசர்கோல்டு, தொட்டப்பன், டிரான்ஸ், ஆபரேஷன் ஜாவா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் மலையாளத்தில் மிகச் சிறந்த நடிகராக கொண்டாடப்பட்டார். சிறிது காலம் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் ஜெயிலர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
சிலை கடத்தலில் ஈடுபட்டு இருக்கும் டான் கதாபாத்திரம் அவரை ரசிகர்களிடம் வெகுவாக கொண்டு சென்றது. குறிப்பாக மலையாளம் கலந்த அவரது தமிழ் பேச்சு வர்மன் என்ற கேரக்டர் ரசிகர்களை மிரட்டியது என்றே சொல்லலாம். அதே நேரத்தில் எந்த அளவுக்கு சினிமாவில் புகழ் பெற்றாரோ அதே அளவு சர்ச்சையிலும் சிக்குவது விநாயகனின் வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஒருவர் குறித்து ஆபாசமாக பேசியது, பல பெண்களுடன் தான் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவு குறித்து பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் பொது இடங்களிலும் அநாகரீகமாக நடந்து கொள்வதும் விநாயகனுக்கு வழக்கம்தான். ஹைதராபாத் விமான நிலையத்திற்கு சென்ற போது சோதனை செய்ய முயன்ற சிஐஎஸ்எஃப் காவலர்களை தாக்கியது, கோவாவில் பொது இடத்தில் அநாகரீகமாக குடிபோதையில் பேசிய வீடியோ, தனது வீட்டு பால்கனியில் அரைகுறை ஆடையில் குடிபோதையில் பக்கத்து வீட்டுக்காரர்களையும் சாலையில் செல்பவர்களையும் மிகவும் ஆபாசமாக பேசியது என சிக்கினார்.
இந்நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் நடிகர் விநாயகன். ஒரு திரைப்பட படப்பிடிப்புக்காக மே 2ஆம் தேதி முதல் அங்கு தங்கியிருந்த அவர், செக் அவுட் செய்யும் நேரத்தில் மது போதையில் ஹோட்டல் ஊழியர்களுடன் சச்சரவில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் சொன்ன நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விநாயகனை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பொது இடத்தில் தொல்லை கொடுத்ததாக, 118(a) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Actor #Vinayakan Has Been Arrested For Causing Nuisance at Ernakulam North Police Station 🤯 #Jailer pic.twitter.com/UnadmpzQFM
— நாய்க்குட்டி (The Dog) (@KuttyNaai_) October 24, 2023
அதற்குப் பிறகு, காவல்நிலையத்தில் விநாயகன் சற்று நேரம் தங்கவைக்கப்பட்டு, அங்கு அவருடன் இருந்த ஒருவரின் உறுதிமொழியைத் தொடர்ந்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், விநாயகன் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications