கோழிக்கோடு மாலில் பிரபல நடிகை மேல் கண்ட இடத்தில் கை வைத்த ரசிகர்.. கன்னத்தில் பளார்- வீடியோ
திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் உள்ள பிரபல மாலில் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ரசிகருக்கு நடிகை சானியா ஐயப்பன் பளார் என கன்னத்தில் அறை விட்டார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. இவர் நடித்த சாட்டர்டே நைட் எனும் மலையாள படம் திரைக்கு வருகிறது. வரும் அக்டோபர் 7ஆம் தேதி இந்த படம் வருகிறது.
இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெறுகின்றன. இந்த படத்தை மலையாள இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாட்டர்டே நைட்
இந்த சாட்டர்டே நைட் படத்தின் பிரமோஷனுக்காக கோழிக்கோட்டில் ஒரு மாலில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகைகளை பார்க்க மாலில் ஏராளமானோர் கூடிவிட்டனர்.

ரசிகர்கள்
அப்போது படத்தில் நடித்தவர்கள் ரசிகர்கள் முன் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். சிலர் அந்த படத்தின் சிறப்புகள் குறித்து பேசினர். சிலர் அந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடைபெற்ற அனுபவங்கள் குறித்து பேசியிருந்தனர். இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து நடிகைகள் வெளியேறி கொண்டிருந்தனர்.

பவுன்ஸர்கள்
அவர்கள் பவுன்ஸர்களின் உதவியுடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது நடிகைகளை அருகே பார்த்துவிட வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு ஓடினர். அப்போது நடிகைகள் சானியா, கிரேஸிடம் அங்கிருந்த நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

நடிகைகள்
இதனால் நடிகை சானியா ஐயப்பன், அந்த ரசிகரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். உடனே அவரை பவுன்ஸர்கள் சுற்றி வளைத்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். நடிகை அறைவிட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

சமூகவலைதளம்
இந்த கசப்பான சம்பவம் குறித்து அந்த இரு நடிகைகளுமே தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த நடிகைகளுக்கு ஆதரவாக நிவின் பாலி, சிஜுவில்சன், ரச்சானா நாராயணகுட்டி உள்ளிட்டோர் கருத்துகளை பதிவிட்டுள்ளார்கள். நிவின் பாலி அந்த மாலில் நடந்த விஷயங்களை விவரித்து யாருக்கும் இது போன்ற சம்பவம் நடக்கக் கூடாது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்ஸ்டா
அது போல் சிஜு வில்சன் தனது இன்ஸ்டாவில் கூறுகையில், இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. சானியா ஐயப்பன் தனது தைரியமான செயல் மூலம் அனைவருக்கும் முன்மாதிரியாக நிகழ்கிறார். அந்த ரசிகரின் முகத்தில் அறை விடும் அளவுக்கு வலிமையானவர். பாலியல் சீண்டலுக்கு எதிராக குரல் கொடுத்ததால் உங்கள் மீது எனக்கு அளவுக்கடந்த மரியாதை ஏற்பட்டுவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

குவியும் பாராட்டுகள்
அது போல் நடிகையும் டான்ஸருமான ரச்சனா நாராயண குட்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகள் கிரேஸ் ஆன்டணியும் சானியா ஐயப்பனும் பெருமைக்குரியவர்கள் என குறிப்பிட்டுள்ளார். இது போன்ற அத்துமீறல்களை கண்டு காணாமல் இருப்பதை விட அதற்காக எதிர்வினையாற்றி அதை பொதுவெளியில் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications