கரையும் காங்.! ஒரே ஆப்ஷன் பாஜக தான்.. தென் மாநிலங்களுக்கு பாஜகவின் சூப்பர் திட்டம்! அமித் ஷா சூசகம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பாஜக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரியில் பல பிரச்சினைகள் நிலவுகிறது. இது தொடர்பாக விவாதிக்கத் தென் மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கேரளாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டு பல விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர்.

 அமித் ஷா

அமித் ஷா

மத்திய உள் துறை அமைச்சகம் நடத்திய இந்த தென் மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாஜக கட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். காங்கிரஸ் அழித்து வருவதாகக் குறிப்பிட்ட அமித் ஷா, பாஜக தான் தென் மாநிலங்களின் எதிர்காலம் என்றும் உலகமே கம்யூனிஸ்ட் கட்சிகளை அகற்றி வருகிறது என்றும் கூறினார்.

 காணாமல் போகும்

காணாமல் போகும்

காங்கிரஸ் கட்சியை நேரடியாக விமர்சித்துப் பேசிய அமித் ஷா, "காங்கிரஸ் இந்தியாவில் இருந்து அழிந்து கொண்டிருக்கிறது, கம்யூனிஸ்ட் கட்சி உலகிலேயே அழியும் நிலையில் உள்ளது. கேரளாவில் பாஜக கட்சிக்கு மட்டுமே எதிர்காலம் உள்ளது. இதனை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்."

 பிற்படுத்தப்பட்டோர் நலன்

பிற்படுத்தப்பட்டோர் நலன்

மத்திய பாஜக அரசு பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை வகுப்பினரை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்டுகளும் பட்டியலின மற்றும் பழங்குடியினரின் நலனுக்காக ஒருபோதும் பாடுபட்டதில்லை. அவர்களை வெறும் வாக்கு வங்கிகளாகவே இரு கட்சிகளும் நடத்தினார்கள்.

அம்பேத்கர்

அம்பேத்கர்

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்த நாட்டிற்கு மிகப் பெரிய பங்களிப்பைக் கொடுத்துள்ளார். ஆனால், அதைக் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. இதனால் தான் அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஆட்சியில் பாரத ரத்னா வழங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் தான் அவருக்குப் பாரத ரத்னா வழங்கப்பட்டது

தேசபக்தி

தேசபக்தி

கேரளாவில் பாஜகவின் வளர்ச்சிக்காக மாநிலத்தில் தொண்டர்கள் ஆற்றி வரும் பணிகளைக் கவனித்து வருகிறோம். அது பாராட்டும் வகையிலேயே உள்ளது. கேரளாவில் நாட்டுக்காக உழைக்கத் தேசபக்தியும், தியாகமும், வீரமும் வேண்டும்" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+