மிஸ் ஆகிடுச்சு! டோலோவை வைத்து "சதித்திட்டம்".. "பாய்சன்" காதலி கிரீஷ்மா வீட்டில் கிடைத்த அந்த பொருள்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஹாரோன் என்ற இளைஞரை கிரீஷ்மா என்ற பெண் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கிரீஷ்மா வீட்டில் இருந்து முக்கியமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கேரளா எல்லையில் களியக்காவிளை தாண்டி பாறசாலை பகுதியில் வசித்து வந்தார் ஷாரோன் ராஜ். கடந்த மாதம் 25ம் தேதி அந்த இளைஞர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
23 வயதே ஆன இவர் கல்லூரி படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் கிரீஷ்மா என்ற பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சர்ச்சில் திருமணம் செய்து கொண்டனர்.
கிரீஷ்மாதான் சமீபத்தில் ஷரோனை திருமணம் செய்து கொண்டு, அதன்பின் அவருக்கு விஷம் கலந்த கஷாயத்தை கொடுத்து கொலை செய்துள்ளார்.

கொலை
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக எவிடன்ஸ் கலெக்சன் பணிகளில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அதாவது குற்றம் செய்த கிரீஷ்மாவை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விசாரணை செய்வார்கள். அவர்கள் இதற்கு முன் சென்ற இடங்கள், அவர்கள் சந்தித்த இடங்கள், அவர்கள் ஒன்றாக பழகிய இடங்களுக்கு எல்லாம் அழைத்து செல்வார்கள். அதன்படி நேற்று அவர்கள் திருமணம் செய்து கொண்ட வெட்டிகாடு சர்ச்சுக்கு கொண்டு சென்றனர்.

ஷாரோன்
அங்கு ஷாரோன் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாக கிரீஷ்மா தெரிவித்து இருந்தார். நான் திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவன்தான் என்னை பைக்கில் இங்கு அழைத்து வந்தான். என்னை பைக்கில் அழைத்து வந்து கட்டாயபடுத்தி திருமணம் செய்து வைத்தான். என்று வாக்குமூலம் கொடுத்து இருந்தார் கிரீஷ்மா. இந்த நிலையில் அவர்கள் படித்த சிஎஸ்ஐ கல்லூரிக்கு இன்று கிரீஷ்மாவை போலீசார் அழைத்து சென்றனர்.

வீட்டில் சோதனை
இந்த சம்பவம் தொடர்பாக கிரீஷ்மா வீட்டில் இருந்து முக்கியமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அவரின் வீட்டில் இரண்டு விஷ பாட்டில்கள் பயன்படுத்தப்படாமல் கிடைத்து உள்ளன. அதேபோல் ஒரு காஷ்ய பாட்டிலும் கிடைத்து உள்ளது. இந்த பாட்டில்கள், ஷரோன் ஒருவேளை தப்பித்துவிட்டால் பின்னர் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த பாட்டில்கள் என்று கூறப்படுகிறது. அதாவது எத்தனை தடவை மிஸ் ஆனாலும் ஷரோனை கொலை செய்தே ஆக வேண்டும் என்ற திட்டத்தில் கிரீஷ்மா இருந்துள்ளார்.

கஷாயம்
அவள் வீட்டில் விஷத்தை பயன்படுத்துவது தொடர்பான புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட கொலை செய்வதில் அவர் எக்ஸ்பர்ட் போல ஆகி உள்ளார். ஷாரோனுக்கு கஷாயத்தில்தான் விஷம் வைத்து கிரீஷ்மா கொன்றுள்ளார். ஆனால் அதற்கு முன் ஜுஸில் விஷம் வைத்ததாக செய்திகள் வந்தன. இது தொடர்பாக இன்று கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் ஒரு மாதத்தில் 10 முறை நான் ஷாரோனை கொலை செய்ய முயன்றேன். அதில் இடையில் ஒரு முறை விஷ மாத்திரை கொடுத்து கொலை செய்ய முயன்றேன்.

விஷம் கொலை
கல்லூரியில் ஒரு முறை ஜூஸ் குடிக்கும் போட்டி நடந்தது. அப்போது டோலோ மாதிரிகளை பொடியாக்கி ஜுஸில் கலந்து கொடுத்தேன். 20 மாத்திரைகளை பொடியாக்கி கொடுத்தேன். ஆனால் இதனால் அவன் சாகவில்லை. அவன் வாந்தி எடுத்துவிட்டான். அதோடு பாதி ஜூசை அவன் குடிக்கவில்லை. அதனால் தப்பித்துக்கொண்டான். இப்படி ஒரே மாதத்தில் 10 முறை அவனை கொலை செய்ய முயன்றேன். இதில் கடைசியில்தான் கொலை செய்ய முடிந்தது என்று கிரீஷ்மா அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.

வாக்குமூலம்
இந்த முறை கிரீஷ்மா கல்லூரிக்கு சென்ற போது அங்கு இருந்த மாணவ, மாணவியர் பலர் கிரீஷ்மவை பார்த்து ஓ என்று கூச்சல் போட்டனர். அதோடு அங்கே பொதுமக்கள் பலரும் கூடி நின்றனர். கிரீஷ்மாவை கடுமையாக விமர்சனம் செய்து ஓ ஓ என்று கத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இருந்தாலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்ததால் சூழ்நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. நாளை கிரீஷ்மாவை அவரின் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!










Click it and Unblock the Notifications