லண்டன் செல்லவிருந்த நர்ஸ் பலி! கேரள கோயில்களில் அரளிப் பூக்களுக்கு தடை விதித்த தேவஸ்வம் போர்டு!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அரளிப்பூவை சாப்பிட்ட இளம்பெண் கடந்த வாரம் இறந்ததை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள கோயில்களில் அரளிப் பூக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகள் சூர்யா (23). நர்சிங் படித்துள்ளார். இவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து லண்டன் செல்வதற்காக அவர் தயாராகிக் கொண்டிருந்தார்.

இதற்காக அவர் கொச்சி விமான நிலையத்திற்கு கிளம்பிய சூர்யா தனது வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு தான் வெளிநாடு செல்வதை நண்பர்கள், உறவினர்களுக்கு போன் மூலம் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சூர்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் அடுத்த நாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூர்யாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்த போதுதான் அவர் போனில் பேசியபடியே அங்கிருந்த அரளிப் பூக்களை வாயில் போட்டு மென்றது தெரியவந்தது.
அரளிப்பூக்களை சாப்பிட்டதே அவரது மரணத்திற்கு காரணம் என கேரள காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கேரள அரசு நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுக்குள்பட்ட 1200 கோயில்கள், மலபார் தேவசம் போர்டுக்கு உள்பட்ட 1300 கோயில்கள் என சுமார் 2500 கோயில்களில் இனி அரளி பூக்களை பிரசாதமாக வழங்க தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில் திருவிதாங்கூருக்குள்பட்ட அனைத்து கோயில்களிலும் அரளி பூக்களை தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, பக்தர்கள் துளசி, இட்லி பூ, ரோஜா பூக்களை நெய்வேத்தியம் மற்றும் பிரசாதத்துக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
கோயில் பூஜைகளில் அரளிப் பூக்களைப் பயன்படுத்தலாமே தவிர பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படாது. மலபார் தேவசம் போர்டுக்கு உள்பட்ட கோயில்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக அரளிப்பூவுக்கு தடை செய்யப்படுகிறது. இந்த அரளிப் பூக்கள் பிங்க், வெள்ளை, மஞ்சள் நிறத்தில் உள்ளன.
வாஸ்து சாஸ்திரத்தில் அரளி பூக்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அரளி மலர் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியும், பல நன்மைகளும் உண்டாகும் என்பது நம்பிக்கை. இதனால் அரளி செடி விஷமாக கருதப்பட்டாலும் வாஸ்துபடி அதன் பூக்களால் மிகவும் புனிதமானது என கருதப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications