பாலியல் புகார் எதிரொலி: மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா
திருவனந்தபுரம்: பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) தலைவர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். அவரை தொடர்ந்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்யப்பட்டு செயற்குழு கலைக்கப்பட்டுள்ளது.
மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக் ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளதை அடுத்து சித்திக் , அம்மாவின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து கடந்த திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். சித்திக் தனது ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் தலைவர் மோகன்லாலிடம் ஒப்படைத்த நிலையில் இன்று மோகன்லாலும் ராஜினாமா செய்துள்ளார்.

அவருடன் மற்ற நிர்வாகிகளும் ராஜினாமா செய்ததால் செயற்குழுவே கலைக்கப்பட்டுவிட்டது. மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து ஹேமா தலைமையில் ஒரு கமிஷன் ஏற்படுத்தப்பட்டது.
இந்த கமிட்டி, புகார் கொடுத்த நடிகைகளிடம் விசாரணை நடத்தி ஒரு அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், "மலையாள திரையுலகமே 15 பேர் கொண்டவர்களின் பிடியில் இருப்பதாக நடிகைகள் குற்றம்சாட்டினர்.
நடிகைகளை அரைகுறை ஆடைகளில் தேவையின்றி நடிக்க வற்புறுத்துகிறார்கள். அது போல் ஒரு நடிகர், தன்னை கட்டிப் பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்கு 17 முறை ரீடேக்குகள் வாங்கியதாகவும் நடிகை குற்றம்சாட்டியிருந்தார். அது போல் சம ஊதியம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என நடிகைகள் குற்றம்சாட்டினர்.
மொத்தம் 235 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் ஒரு பகுதி மட்டுமே வெளியாகியுள்ளது. அதுவே இன்று மலையாள திரையுலகில் பலருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் சித்திக், மலையாள இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
அந்த புகாரில், நடிகர் சித்திக், கொச்சியில் ஒரு ஹோட்டலுக்கு அவரது மகன் நடித்த படத்தின் முன்னோட்டம் வெளியிடுவதற்காக என்னை வரச்சொன்னார், நானும் அங்கு சென்றேன். அப்போது அவர் என்னிடம் அட்ஜஸ்ட் செய்ய தயாரா என நேரடியாகவே கேட்டார். அப்போது எனக்கு 21 வயது என்பதால் அவர் கேட்டதற்கான அர்த்தம் புரியவில்லை. அப்படி என்றால் என்ன என கேட்டதற்கு நடிகர் சித்திக், "நீண்ட நகங்களை கொண்ட பெண்களை எனக்கு பிடிக்கும்" என கூறி, என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்.
ஒரு மணி நேரம் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து, "இதை வெளியே சொன்னால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை, உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது" என பேசினார். சித்திக்கிற்கு ஆதரவாக நிறைய பேர் இருக்கிறார்கள். அவருக்கும் ஒரு மகள் இருக்கிறார், அவருக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சினை நடந்தால் சும்மா இருப்பாரா, திரையுலகில் இப்படி முகமூடி அணிந்து திரியும் நபர்களை பற்றி நினைக்கும் போது வெட்கப்படுகிறேன் என அந்த நடிகை ஆதங்கப்பட்டார்.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான சித்திக், கடந்த திங்கள்கிழமை மலையாள திரையுலகத்தின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அம்மா அமைப்பின் தலைவர் மோகன்லாலிடம் சமர்ப்பித்தார். இந்த நிலையில் அம்மா அமைப்பின் மொத்த நிர்வாகிகளும் இன்று ராஜினாமா செய்துள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications