Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய் போய்விட்டதே! இவ்வளவு மோசமான தோல்வி.. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த கேரளா!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: புதுப்பள்ளி இடைத்தேர்தல் முடிவு கேரள பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அத்தொகுதியில், பாஜக வேட்பாளர் வெறும் 5.02% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். பாஜக முன்வைத்த பிரச்சாரங்கள் எதுவும் அக்கட்சிக்கு கைகொடுக்கவில்லை.

கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 2 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. 2 இடங்களில் பாஜக அல்லாத கூட்டணி வென்றுள்ளது. 3 இடங்களில் பாஜக வென்றுள்ளது. கேரளாவில் உம்மன் சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

Big shock for BJP: Campaign not worked in kerala: Efforts to woo Hindus may have also helped Congress instead

கேரளா இடைத்தேர்தல்: கேரள மாநிலத்தின் புதுப்பள்ளி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மறைந்த உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன், காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பாஜக சார்பில் லிஜின் லால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஜேக் சி தாமஸ் ஆகியோர் வேட்பாளர்களாக களம் கண்டனர்.

கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் 1970 முதல் தான் இறக்கும் வரை தொடர்ச்சியாக 12 முறை, அதாவது 53 ஆண்டுகள் உம்மன் சாண்டி தான் எம்.எல்.ஏ ஆக இருந்தார். உம்மன் சாண்டியின் கோட்டையான புதுப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக, காங்கிரஸ், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

காங் வெற்றி: நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சாண்டி உம்மன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே, சாண்டி உம்மன் முன்னிலை வகித்து வந்த நிலையில், அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கேஜ் தாமஸை விட, 37,719 வாக்குகள் அதிகம் பெற்று சாண்டி உம்மன் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் பதிவான வாக்குகளில், சாண்டி உம்மன் 80,144 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட லிஜின் லால் வெறும் 5.02% வாக்குகள் (6,558 வாக்குகள்) மட்டுமே பெற்று டெபாசிட்டை பறிகொடுத்துள்ளார். தொடர்ந்து 53 ஆண்டுகளாக காங்கிரஸ் வசமிருந்த இந்த தொகுதியை மீண்டும் அக்கட்சி தக்க வைத்துள்ளது.

பாஜகவுக்கு அதிர்ச்சி: புதுப்பள்ளி இடைத்தேர்தல் முடிவு கேரள பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக வேட்பாளர் லிஜின் லால் வெறும் 5.02% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டிலிருந்து இந்த தொகுதியில் கட்சியின் மோசமான தோற்றத்தில், லால் 6,558 வாக்குகளை மட்டுமே பெற்றார்,

2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் இதே தொகுதியில் 11,694 வாக்குகளைப் பெற்றார். புதுப்பள்ளியில் பதிவான வாக்குகளில் பாஜக வேட்பாளர் என் ஹரி 8.87% வாக்குகளைப் பெற்றிருந்தார். அதற்கு முன்னதாக 2016ஆம் ஆண்டில், பாஜக தனது கிறிஸ்தவ முகமான ஜார்ஜ் குரியனை களமிறக்கியபோது, 11.93% வாக்குகளைப் பெற்றது. 2011 தேர்தலில் பாஜகவின் சுனில் குமார், 5.71% வாக்குகளைப் பெற்றார்.

கூட்டணி டிராமா: பாரதிய ஜனதா கட்சி இந்த இடைத்தேர்தலில் அக்கட்சியின் கேரள பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவை உருவாக்கியது. ராதா மோகன்தாஸ் அகர்வால் புதுப்பள்ளியில் முகாமிட்டு, அடிமட்ட பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், வி முரளீதரன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், பூத் அளவில், குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்களின் குடும்பத்தினர்களை குறிவைத்து கூட்டங்களில் உரையாற்றினர்.

பாஜக இந்த இடைத்தேர்தலில் அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை எழுப்பியது. 'இந்தியா' கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் தனித்தனியாக களமிறங்குவதை டிராமா என விமர்சித்தது. கேரளாவில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் கட்சிகள், 2024 லோக்சபா தேர்தலில் இணைந்து களத்தில் சந்திக்கப் போகின்றனவாம் என விமர்சித்து பிரச்சாரம் செய்தது பாஜக.

ராஜதந்திரங்கள்: மேலும், புதுப்பள்ளி தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவ மக்கள் மத்தியில், நம்பிக்கையைப் பெற முயன்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி, சிறிது காலத்திற்கு முன்பு பாஜகவுக்குத் தாவி, உடனடியாக அக்கட்சியின் தேசியச் செயலாளராக ஆக்கப்பட்டார். அவர், புதுப்பள்ளி தொகுதியில் கிறிஸ்தவ வாக்காளர்களைக் கவரும் வகையில் தீவிர பிரச்சாரம் செய்தார்.

எனினும், பாஜக அதிர்ச்சிக்குரிய வகையில் பரிதாபமாக டெபாசிட் இழந்து தோற்றுள்ளது. இது பாஜக தேசிய தலைமைக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. காங்கிரஸ், சிபிஐஎம் தனித்தனியாகப் போட்டியிட்டும், பாஜக வெறும் 5 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது, கேரள பாஜகவினருக்கு ஷாக் கொடுத்துள்ளது.

விநாயகர் சர்ச்சை: விநாயகர் பற்றி சபாநாயகர் ஏஎன் ஷம்சீரின் கருத்துக்கள் தொடர்பாக சிபிஐஎம் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் பாஜக இந்து உணர்வுகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சித்தது. ஆனால் இந்த சர்ச்சை காங்கிரஸுக்கு மேலும் உதவியதாகத் தெரிகிறது. 2019 லோக்சபா தேர்தலின்போதும், சபரிமலை கோவிலில் இளம் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சர்ச்சையின் பின்னணியில், சிபிஐம் எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டும் பாஜகவின் முயற்சிகள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், இடைத்தேர்தல் முடிவு, கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசுக்கு எதிரான வலுவான உணர்வுகளை பிரதிபலிப்பதாகவும், மறைந்த உம்மன் சாண்டிக்கு ஆதரவான அனுதாப அலையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் அரசுக்கு இது ஒரு அதிர்ச்சி. தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணி உருவானது கேரளாவில் சிபிஎம்மை தோற்கடித்துள்ளது. கேரள சிபிஐஎம் ஆட்சிக்கு எதிரான மனப்பான்மையால் காங்கிரசுக்கு லாபம் கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+