கேரள உள்ளாட்சி தேர்தல்: முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகாவை களமிறக்கிய பாஜக.. யார் இவர்?
திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் களம் சூடாகியுள்ள நிலையில், கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்ற ஆர். ஸ்ரீலேகாவை திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் இறக்கியுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது ஒருபுறம் இருக்க கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்
சட்டமன்ற தேர்தலில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உள்ளாட்சி தேர்தலில் தங்கள் பலத்தை காட்ட கேரள கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கேரளாவில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முதல் முறையாக கால் பதித்தது. திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் உற்சாகம் அடைந்த பாஜக சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் கட்சியை வீழ்த்த முனைப்பு காட்டி வருகிறது.
மறுபக்கம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழலிதான் அங்கு உள்ளாட்சி தேர்தல் களம் அனல் பறக்கிறது. குறிப்பாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்ற காங்கிரஸ் - பாஜக போட்டா போட்டி நிலவுகிறது.
முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி
இந்த நிலையில்தான், கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்ற ஆர்.ஸ்ரீலேகாவை பாஜக, திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் களம் இறக்கியுள்ளது. மாநகராட்சியின் 67 பிரிவுகளுக்கான வேட்பாளர்களின் ஆரம்ப பட்டியலை பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று அறிவித்தார். இதில், ஸ்ரீலேகா சாஸ்தமங்கலம் பிரிவில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
தடகள வீராங்கனை பத்மினி தாமஸ் பாளையத்தில் இருந்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீலேகா போட்டியிடும் சாஸ்தமங்கலம் வார்டில் ஆளும் சிபிஎம்மிடம் இருந்து இழந்த திருவனந்தபுரம் மாநகரட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியும் வலுவான வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. அதாவது முன்னாள் எம்.எல்.ஏ சபரிநாதனை காங்கிரஸ் இங்கு நிறுத்தியுள்ளது.
பாஜகவின் வியூகம்
திருவனந்தபுரம் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) 52 இடங்களையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 35 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 10 இடங்களையும் கொண்டுள்ளன.
2010ல் வெறும் ஆறு இடங்களை மட்டுமே வென்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் 35 இடங்களைப் வென்று வலுவாக கால் பதித்தது. திருவனந்தபுரம் மாநகராட்சியை எப்படியவாது கைப்பற்ற வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டும் நிலையில், பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மாநரகாட்சி தேர்தலை நேரடியாக கண்கானித்து வருகிறது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் மாநகரட்சிக்குட்பட்ட தொகுதிகளில் மூன்றை கைப்பற்றிவிட வேண்டும் என்ற பிளானுடன் பாஜக இந்த வியூகம் வகுத்து வருகிறது.
யார் இந்த ஸ்ரீலேகா?
கேரளத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமைக்குரிய ஆர். ஸ்ரீலேகா தனது 33 ஆண்டுகாலப் பணிக்காலத்தில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். ஆலப்புழா, பத்தனம்திட்டா, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவிலும், மாநில போக்குவரத்து ஆணையராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.
மேலும், குற்றப்பிரிவின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி போன்ற உயர் பதவிகளையும் அவர் வகித்துள்ளார். 2020-ஆம் ஆண்டில் 60 வயதை எட்டியபோது பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன், கேரளாவில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஸ்ரீலேகா தலைமை தாங்கியுள்ளார்.
நடிகர் திலீப் நிரபராதி என
ஸ்ரீலேகாவின் பெயர் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் (பின்னர் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார்) மற்றும் யூடியூபில் அவர் வெளியிட்ட 'சஸ்நேகம் ஸ்ரீலேகா' (அன்புடன் ஸ்ரீலேகா) என்ற வீடியோ தொடர் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் காவல்துறை அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள் என்று அவர் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இது கேரள காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2022-ஆம் ஆண்டில், 2017 நடிகை தாக்குதல் வழக்கில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நடிகர் திலீப் நிரபராதி என்று ஸ்ரீலேகா கூறி பரபரப்பை கிளப்பினார்.. திலீப் நீதிமன்றக் காவலில் சிறையிலடக்கப்பட்டு இருந்தபோது, ஸ்ரீலேகா சிறைத்துறை டிஜிபியாக இருந்தார். தனது வீடியோவில், ஊடகங்களின் அழுத்தத்தால் போலீஸ் செயல்பட்டதாகவும் கூறினார்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications