Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛வெற்றி உறுதி’.. திருவனந்தபுரத்தில் போட்டியிடும் நிர்மலா சீதாராமன்? பாஜக சர்வேயில் ‛‛பாசிட்டிவ்’’

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக சார்பில் களமிறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பாஜகவின் உள்கட்சி சர்வேயில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நிர்மலா சீதாராமனுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதனால் அவர் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கி உள்ளன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

BJP internal survey favours Nirmala as Thiruvananthapuram candidate and she could be beat Congress MP Shashi Tharoor

மத்தியில் தற்போது பாஜகவுக்கு 303 லோக்சபா எம்பிக்கள் உள்ளன. இத்தகைய சூழலில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளிலும் வெல்லும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக அடுத்து வரும் 100 நாட்கள் பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் சில தினங்களுக்கு முன்பு நடந்த பாஜக பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

இத்தகைய சூழலில் தான் பாஜகவின் மூத்த தலைவர்களாகவும், ராஜ்யசபா எம்பியாக மத்திய அமைச்சர்களாகவும் இருக்கும் முக்கிய தலைவர்களை தேர்தலில் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாகி மத்திய நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் மற்றும் குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகி வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் ஆகியோர் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் 2 பேரும் தென்மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இங்குள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கேரளாவின் திருவனந்தபுரம், கர்நாடகாவின் பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்திய தொகுதி, உடுப்பி - சிக்கமகளூர், உத்தர கன்னடா ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதி தொடர்பாக பாஜக சார்பில் உள்கட்சி சர்வே மேற்கொள்ளப்பட்டது. அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் யாரை நிறுத்தலாம்? என்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயில் பாஜகவின் கேரளா மாநில நிர்வாகிகள், திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் பங்கேற்று கருத்து தெரிவித்துள்ளனர். இதில் நிர்மலா சீதாராமன் போட்டியிட்டால் நிச்சயம் திருவனந்தபுரம் தொகுதியில் வெல்லலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது கடந்த 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சசிதரூர் 3 முறையும் வாகை சூடியுள்ளார். இந்த முறையும் அவர் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம். இந்த தொகுதியை பொறுத்தமட்டில் சசிதரூர் மிகவும் பலமான வேட்பாளராக உள்ளார். ஆனாலும் கூட அவரது வெற்றி வாக்கு வித்தியாசம் என்பது இதுவரை ஒரு லட்சத்தை தாண்டவில்லை.

கடந்த 2009 தேர்தலில் 99,998 வாக்குகள் வித்தியாசத்திலும், 2014ல் 15,470 வாக்குகள் வித்தியாசத்திலும், 2019ல் 99,989 வாக்குகள் வித்தியாசத்திலும் தான் சசிதரூர் ஜெயித்துள்ளார். அந்த வகையில் நிர்மலா சீதாராமனை வரும் தேர்தலில் களமிறங்கினால் நிச்சயம் சசிதரூரை வீழ்த்த முடியும். நிர்மலா சீதாராமன் இந்தியா அளவில் பெயர் பெற்ற தலைவராக இருப்பது அவருக்கு பிளஸ் பாயிண்டாக அமையும். இதனால் சசிதரூரை வீழ்த்த பாஜக சார்பில் நிர்மலா சீதாராமன் தான் பொருத்தமாக இருப்பார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்.

இதனால் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக நிர்மலா சீதாராமனை வேட்பாளராக அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் நிர்மலா சீதாராமனுக்கு அடுத்தப்படியாக திருவனந்தபுரம் வேட்பாளராக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரனுக்கு அதிக ஆதரவு உள்ளது. மேலும் நடிகர் சுரேஷ் கோபி, கும்மனம் ராஜசேகரன் (கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றவர்) நடிகர் மோகன்லால், பாஜக மாவட்ட தலைவர் விவி ராஜேஷ் ஆகியோரையும் நிறுத்தலாம் என சில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு பாஜக நிர்வாகிகளின் ஆதரவு என்பது மிகவும் குறைவாக உள்ளது. இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் கூட கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இவரை தான் பாஜக திருவனந்தபுரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கும் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் பாஜக நிர்வாகிகள் அவரை நிறுத்த வேண்டாம். அவரை வேறு தொகுதியில் நிறுத்த வேண்டும். திருவனந்தபுரத்தில் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிட்டால் அது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிர்மலா சீதாராமன் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கூட இந்த விஷயத்தில் இறுதி முடிவை கட்சி மேலிடம் தான் எடுக்கும் என்பதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் பாஜக வேட்பாளராக யார் களமிறங்க உள்ளார்? என்பதை அறிய நாம் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+