கேரளாவின் வரலாற்றை மாற்றுகிறதா பாஜக? சசி தரூருக்கும் ஷாக்.. இந்தியா டிவியின் பரபர கருத்துக்கணிப்பு
திருவனந்தபுரம்: நடைபெறும் லோக்சபா தேர்தலில், கேரளா மாநிலத்தில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்தியா டிவி - சி.என்.எக்ஸ் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. இதுவரை கேரளாவில் லோக்சபா தொகுதியில் ஒருமுறை கூட பாஜக வெற்றி பெறாத நிலையில் தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பால் பாஜகவினர் குஷியடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் சில சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. தற்போது இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் லோக்சபா தேர்தல் கருத்து கணிப்புகளை மேற்கொண்டு அதன் டேட்டாக்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், கேரளாவில் லோக்சபா தேர்தலில் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு என்பது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டது. அதன் முடிவுகளை இந்தியா டிவி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான UDF-க்கு 11 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. கேரளாவில் ஆளும் இடதுசாரிகளுக்கு 6 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாம்.
பாஜகவுக்கு 3 இடங்கள்: அதேவேளையில், பாஜக 3 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்தியா டிவி - சி.என்.எக்ஸ் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதிலும், திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜீவ் சந்திரசேகர் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்று முறை திருவனந்தபுரம் எம்பியாக இருக்கும் சசிதரூருக்கு இந்த தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்பதை இந்தியா டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
தென்னிந்தியாவில் பாஜக தனது கணக்கை தொடங்காத மாநிலமாக அதாவது இத்தனை லோக்சபா தேர்தல்களிலும் ஒரே ஒரு இடத்தைக் கூட பாஜகவால் பெற முடியாத மாநிலமாக கேரளா இருந்து வருகிறது. கடந்த 2019 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் கணிசமாக உயர்ந்தது. பாஜக 15 இடங்களில் போட்டியிட்டு 13% வாக்குகளைப் பெற்றது.
பாஜகவினர் உற்சாகம்: இந்த நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் பாஜக மூன்று இடங்களில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்தியா டிவி கருத்துக்கணிப்பு முடிவு வெளியிட்டுள்ளதால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தியா டுடே, டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்புகளில் பாஜகவுக்கு கேரளாவில் ஒரு கூடம் தேறாது என்று கூறியிருந்த நிலையில், இந்தியா டிவி கருத்துக்கணிப்புகளில் பாஜக மூன்று இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications