இந்திரா காந்தி இந்தியாவின் தாய்! பாஜகவிலிருந்து புகழ்ந்த சுரேஷ் கோபி! கேரளாவில் சலசலப்பு
திருவனந்தபுரம்: மத்திய இணை அமைச்சரும் கேரளாவின் முதல் பாஜக எம்பியுமான நடிகர் சுரேஷ் கோபி, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, இந்தியாவின் தாய் என பாராட்டியுள்ளார். பாஜகவில் இருந்து கொண்டு காங்கிரஸ் தலைவரை அவர் பாராட்டியுள்ளது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் புங்குன்னத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாகரனின் நினைவுச் சின்னமான முரளி மந்திரத்தை சுரேஷ் கோபி பார்வையிட்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் தாய்.

கருணாகரன் திறமையான நிர்வாகி, அவரும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள முன்னாள் முதல்வர் நாயனாரும் எனது அரசியல் குருமார்கள் ஆவார். எனது வருகையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம்.
எனது குருவுக்கு மரியாதை செலுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். நாயனார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ள உறவை போல் கருணாகரனின் குடும்பத்தினருடனும் எனக்கு நல்ல நட்பு, உறவு உள்ளது. கருணாகரன் கேரள காங்கிரஸின் தந்தையாக இருந்தார் என சுரேஷ் கோபி தெரிவித்திருந்தார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சுரேஷ் கோபிக்கு திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் கேரளாவில் பாஜகவின் முதல் எம்பி என்ற பெருமையை பெற்றார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கருணாகரனின் மகன் முரளிதரன் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வி.எஸ். சுனில் குமாரும் தோல்வி அடைந்தார். சுரேஷ் கோபி சுனில் குமாரை 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
இந்த வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக சுரேஷ் கோபிக்கு மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் பதவியை பாஜக வழங்கியுள்ளது. முன்னதாக தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம், தான் எம்பியாக இருந்து மக்கள் சேவையாற்றவே விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார். இதையடுத்து சுரேஷ் கோபி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக செய்திகள் வந்ததை அடுத்து நான் பதவியிலிருந்து விலகுவதாக நான் அறிவிக்கவில்லை என மறுப்பும் தெரிவித்திருந்தார்.
பாஜகவில் எம்பியாக இருந்து கொண்டு அமைச்சர் பதவியையும் வாங்கிக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்தியை புகழ்ந்து பேசியது கேரள பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications