இந்துக்களை புண்படுத்திவிட்டு நிகழ்ச்சி நடத்துவதா? பினராயி விஜயன், மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எச்சரிக்கை
திருவனந்தபுரம்: தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் மற்றும் பினராயி விஜயன் கலந்து கொள்ளவுள்ளனர். இது பாஜகவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களிடம் மன்னிப்பு கேட்காவிடின் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாஜகவுக்கும், மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. முக்கியமாக தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகள், மத்திய அரசு இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. திமுக, சிபிஎம் கட்சிகளுக்கு எதிராக பாஜகவும், பாஜகவுக்கு எதிராக திமுக மற்றும் சிபிஎம் செயல்படுவதாக விமர்சனம் உள்ளது.

உலக ஐயப்பா சங்கமம்
திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் அரசு மற்றும் அரசியல் ரீதியாக நெருக்கமாக செயல்பட்டு வருகிறார்கள். பல நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்து கலந்து கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கேரளா அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் நிர்வாகம் இணைந்து உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியை, பம்பையில் வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் முதலமைச்சர் ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்டாலின்.. பினராயி பங்கேற்பு
திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டின் 70 ஆம் ஆண்டை முன்னிட்டு இந்த சங்கமம் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேவஸ்தானம் நிர்வாகம் அமைச்சர் வசவன், மு.க. ஸ்டாலினை கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இதில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
மறுபக்கம் பாஜகவை வலுவாக எதிர்க்கும் இரண்டு மாநில முதலமைச்சர்கள் ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது பாஜகவுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேரளா மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தன் எக்ஸ் பக்கத்தில் கோபத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பாஜக கண்டனம்
அதில் அவர், "கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இரண்டு மாநில இந்துக்கள் சார்பாக ஒரு செய்தி வெளியிடப்படுகிறது. இவர்கள் இருவரும் பல வருடங்களாக சபரிமலை, ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு தீங்கு ஏற்படுத்தியுள்ளனர். பினராயி பல ஐயப்ப பக்தர்கள் மீது வழக்குப்பதிந்து சிறையில் அடைத்துள்ளார்.
சபரிமலையின் புனித மரபுகளை மீறி, பக்தர்கள் மீது வன்முறையை பாய்ச்சியுள்ளனர். ஸ்டாலினும், அவரின் வாரிசும் தொடர்ந்து இந்துக்களை அவமானம் செய்துள்ளனர். இவை இந்துக்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இதை மக்கள் யாரும் மறக்கவில்லை. மன்னிக்கவும் மாட்டார்கள். 2026 தேர்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்று நாடகம் ஆடுகிறார்கள்.
ஆவேசம்
பினராயி மற்றும் ஸ்டாலின் ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்கள் பக்தர்கள் மற்றும் இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மன்னிப்பு கேட்காமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பாஜக தொண்டர்கள் உங்களை தடுத்து நிறுத்துவார்கள்." என்று கூறியுள்ளார்.
-
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications