கேரளாவில் பாஜகவுக்கு பூஜ்ஜியம் தான்.. மொத்தமாக அள்ளும் காங்கிரஸ் கூட்டணி.. வெளியான புது எக்சிட் போல்
திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜகவுக்கு பூஜ்ஜியம் சீட் தான் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெறும் என்றும் மனோரமா விஎம்ஆர் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், ஜூன் 04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில் தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன. இதேபோல் தென் மாநிலங்களிலும் முன்பை விட இந்த தேர்தலில் அதிக தொகுதிகளை பெறும் என்று ஒருசில செய்தி நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக தமிழகத்தில் 3 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளன. இதேபோல் இதுவரை பாஜக வெற்றி கணக்கை தொடராத கேரளாவில் 1- 3 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்தன. எனினும் இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை முற்றிலுமாக மறுத்து வருகின்றன.
இந்த நிலையில் கேரளாவில் பாஜக கூட்டணிக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி UDF 16 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மனோரமா விஎம்ஆர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு 2 மிகப் பெரிய கூட்டணிகளால் ஆட்சி நடத்தப்படுகிறது. மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF). இன்னொன்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆகும்.
இந்த இரு கூட்டணிகளுமே கேரளாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு பாஜக இதுவரை வெற்றிக்கணக்கை தொடங்கியதே இல்லை. இந்த லோக்சபா தேர்தலில் எப்படியாவது வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டும் என்ற பாஜக பல்வேறு வியூகங்களுடன் பிரசாரத்தை மேற்கொண்டது. ஆனால் கேரளாவில் பாஜகவிற்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும் என்று மனோரமா விஎம்ஆர் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் (ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், கேரள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக 16 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications